வெளியானது ராஜமெளலியின் RRR ரிலீஸ் தேதி!

0
186

வெளியானது ராஜமெளலியின் RRR ரிலீஸ் தேதி!

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் மிக பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. இதில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் சமுத்திரகனி, அஜய் தேவ்கன், பிரியாமணி, ரம்யா கிருஷ்ணன், ஆலியா பட், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர். 400 கோடி ரூபாய் செலவில் மிக பிரம்மாண்டமாக உருவாகிவரும் இந்த படத்தை வரும் அக்டோபர் 13ஆம் தேதி உலகமுழுக்க 10 மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இறுதிகட்ட பணிகளில் இருக்கும் இந்த படத்தின் டப்பிங் வேலைகளும் மும்முரமாக நடைப்பெற்று வருகிறது. தற்போது தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் படத்திற்கு போட்ட முதலீட்டை எடுக்க முடியுமா எனும் குழப்பத்தில் படக்குழு ரிலீஸை அடுத்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி படத்தை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளனர்.