வெளியானது கார்த்தியின் ஜப்பான் படத்தின் டீசர்!
இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் ‘ஜப்பான்’. இதில் கதாநாயகியாக ‘துப்பறிவாளன்’, ‘நம்மவீட்டு பிள்ளை’ போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
ஜப்பான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 28-ஆம் தேதி நேரு உள் விளையாட்டரங்கில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இவ்விழாவில் சூர்யா மற்று சிவகுமார் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இந்நிலையில், ஜப்பான் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. இந்த டீசர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.