வெனோம் 2 (Venom 2) விமர்சனம்

0
181

வெனோம் 2 விமர்சனம்

‘வெனோம்” 2018-ம் ஆண்டு வெளியாகி அதன் இரண்டாம் பாகமான ‘வெனோம் 2- லெட் தேர் பி கார்னேஜ்” தற்போது வெளியாகி உள்ளது.

கதாநாயகன் எட்டியின் உடலில் தஞ்சம் புகுந்திருக்கும் வெனோமிற்க்கும் எப்பொழுதுமே முட்டல் மோதல் இருந்து வருகிறது. இதற்கிடையே சிறையிலிருக்கும் சீரியல் கில்லர்  க்ளெடஸ் கசடி, பத்திரிகையாளரான எட்டியைச் சந்திக்க விருப்பம் தெரிவிக்கிறார். அடுத்தடுத்த சம்பவங்களில் எட்டி புகழடைய, க்ளெடஸ் மரண தண்டனையை எதிர்கொள்கிறார். மரண தண்டனை நிறைவேற்றும் தருணத்தில்  புதியதொரு ஏலியன் சிம்பியாட்டான கார்னேஜ், க்ளெடஸின் உடம்புக்குள் புகுந்துகொள்ள, சிறையில் இருக்கும் அனைவரையும் துவம்சம் செய்து விட்டு வெளியேறுகிறது. அதன் பின் தன் காதலியை தேடி செல்லும்  கார்னேஜ் என்ன செய்தது? அதை எட்டியும் வெனமும் எப்படிச் சமாளித்தார்கள்?என்பதே படத்தின் கதை.

எட்டியாக டாம் ஹார்டி.  வெனோமுக்கும் இவருக்குமான உரையாடல்கள் ஜாலி, கேலி கிண்டலுடன்  நிஜத்தில் ஒரு சிஜி கதாபாத்திரத்தை மனத்தில் நினைத்துக்கொண்டு அது கொடுக்கும் கவுன்டருக்கு ஏற்றவாறு நடிப்பது ரொம்பவே சிரமம். அதை டாம் ஹார்டி சிறப்பாகச் செய்திருக்கிறார்.

வுட்டி ஹாரல்ஸன் இதில் முழுநேர வில்லன். சீரியல் கில்லர் உடல்மொழி எல்லாம் வேற லெவல். துள்ளலுடன் பொடிவைத்துப் பேசும் வசனங்கள், காதலியுடன் செய்யும் சாகசங்கள், கார்னேஜுடனான அதிரடி எனப் படத்தின் ஆல்ரவுண்டராக கோல் அடித்து ஆக்ஷன் சிக்சர் மழையில் நிலை குலைய வைத்து விடுவதில் வெற்றி பெற்றிருக்கிறார்.

கதையில் முக்கியமான பெண் கதாபாத்திரங்களில் வில்லனின் காதலியாக நவோமி ஹாரிஸ், எட்டியின் எக்ஸாக மிச்சல் வில்லியம்ஸ். மிச்சலுக்கும் எட்டிக்கும் இடையேயான உரையாடல்களில் சுவாரஸ்யம் கூட்டுவது வெனோமின் அதிரடி பதில்களும் எழுதப்பட்ட வசன கலாய்ப்புகள்தான் படத்தை தாங்கி பிடிக்கிறது.
கதைக்குத் தேவையான காட்சிகளை மட்டும் வைத்து 90 நிமிடங்களில் சுருக்கமாகப் படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் ஆன்டி சர்க்கிஸ்.கிராபிக்ஸ் காட்சிகள், வெனோமின் சித்தரிப்பு, சாகசங்கள், எட்டியின் வாழ்க்கை, சிக்கல்கள், சிரமங்களை காட்சிப்படுத்தி, வில்லனிடம் இறுதிக் காட்சியில் உருமாறி சண்டையிடும் தருணங்கள் என்று வித்தியாசத்தை கூட்டியிருப்பதில் அசத்தியுள்ளார் இயக்குனர் ஆண்டி சர்க்கிஸ்.

மொத்தத்தில் வெனோம் அனைவருக்கான ஆல்;ரவுண்டர் சாகசப்படம்.