வீரராகவனை மிஞ்சுகிறாரா ராக்கி பாய்? கே.ஜி.எஃப் 2-க்கு திரையரங்குகள் அதிகரிப்பு

0
98

வீரராகவனை மிஞ்சுகிறாரா ராக்கி பாய்? கே.ஜி.எஃப் 2-க்கு திரையரங்குகள் அதிகரிப்பு

தமிழகத்தில் கே.ஜி.எஃப்-2 திரைப்படத்திற்கு திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் கடந்த 13ஆம் தேதி வெளியானது. அந்தத் திரைப்படத்திற்கு 800க்கும் அதிகமான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டன. இதனால் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியான கே.ஜி.எஃப்-2 திரைப்படத்திற்கு 350 திரையரங்குகள் மட்டுமே கிடைத்தன. இந்த நிலையில் கே.ஜி.எப் திரைப்படத்திற்கான வரவேற்பு அதிகரித்துள்ளது. இதன்காரணமாக நள்ளிரவு 1 மணி மற்றும் 3 காட்சிகள் திரையிடப்பட்டு வந்தன. இருந்தபோதிலும் கே.ஜி.எஃப்-2 திரைப்படத்திற்கு மேலும் வரவேற்பு அதிகரித்து வருகிறது.

அதேபோல் பீஸ்ட் திரைப்படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்தது. இதனால் ரசிகர்களின் வருகை சற்று குறைந்துள்ளது. இந்த நிலையில் கே.ஜி.எஃப்-2 திரைப்படத்திற்கான திரையரங்குகளை திரையரங்கு உரிமையாளர்கள் அதிகரித்துள்ளனர். மேலும் பீஸ்ட் படத்திற்கு ஒதுக்கப்பட்ட அதிக எண்ணிக்கை கொண்ட திரையரங்குகள் தற்போது கேஜிஎஃப் திரைப்படத்திற்காக மாற்றப்பட்டு வருகின்றன. இதனால் கே.ஜி.எஃப்-2 திரைப்படம் வரும் நாட்களில் பெரும் வசூலை ஈட்டும் என திரைத்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.