‘வீரமே வாகை சூடும்’ ஜன. 26-ல் தியேட்டரில் வெளியாகும் – நடிகர் விஷால் அறிவிப்பு

0
141

‘வீரமே வாகை சூடும்’ ஜன. 26-ல் தியேட்டரில் வெளியாகும் – நடிகர் விஷால் அறிவிப்பு

நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வீரமே வாகை சூடும். இந்த படத்தை அவரே தயாரித்துள்ளார். து.பா.சரவணன் இந்த படத்தை இயக்கி உள்ளார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். நடிகர் யோகி பாபுவும் நடித்துள்ளார். கடந்த டிசம்பரில் இந்த படத்தின் Rise of A Common Man தீம் பாடல் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் இத்திரைப்படம் வரும் 26-ஆம் தேதி குடியரசு தின விழாவை முன்னிட்டு தியேட்டரில் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளார் நடிகர் விஷால். இதனை அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதே நாளில் இந்த திரைப்படம் சாமான்யடு என்ற பெயரில் தெலுங்கு மொழியில் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என அறிவித்துள்ளார் விஷால். யுவன் ஷங்கர் ராஜா + விஷால் கூட்டணி 11-வது முறையாக இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளது.