வி விமர்சனம்

0
374

வி விமர்சனம்

ட்ரூ சோல் பிக்சர்ஸ் சார்பில் ரூபேஷ்குமார் தயாரித்து ‘வி” படத்தை இயக்கியிருக்கிறார் டாவின்சி சரவணன்.

இதில் ராகவ்,லுதியா,திவ்யன்,ஆர்.என்.ஆர்.மனோகர்,சபிதா ஆனந்த் மற்றும் பல புதுமுகங்கள் நடித்திருக்கின்றனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:-இசை -இளங்கோகலைவாணன், ஒளிப்பதிவு-அணில் கே சாமி,  படத்தொகுப்பு-வி.டி.ஹீஜித், பாடல்கள்; முத்து விஜயன், குகை.மா. புகழேந்தி, கலை-முத்துவேல்,சண்டைப்பயிற்சி;-மிரட்டல் செல்வம், நடனம் சதீஷ், மக்கள் தொடர்பு- விஜயமுரளி, கிளாமர் சத்யா.

பெங்களூரில் வேலை செய்யும் ஐந்து நண்பர்கள் தங்கள் காதலிகளுடன் சைலண்ட் வேலி என்ற இடத்திற்கு சுற்றுலா செல்கின்றனர். அதில் ஒரு ஜோடி ராகவ் மற்றும் லுதியா. இவர்கள் அனைவரும் பைக்கில் செல்கின்றனர். செல்லும் வழியில் லுதியா போனில் வி டாட் காம் என்ற இணையதள ஆப் ஒன்றை நண்பர்களுக்கு பகிர்கிறார். இதில் பிறந்த தேதியை பதிவு செய்தால் இறந்த தேதியை சொல்லும் ஆப் என்று சொல்ல, அனைவரும் அதில் பதிவு செய்கின்றனர். அந்த ஆப் பதிவு செய்தவுடன் அனைவருக்கும் இறக்கும் தேதி ஒரே நாள் தான் என்று காட்டுகிறது. இதனால் அதிர்ச்சியடைவும் அனைவருக்கும் பீதி உண்டாகிறது.

தற்கேற்றாற்போல் லாரி ஒன்று இவர்களை வழி நெடுக துரத்துகிறது. இந்த பயத்தினால் கலைப்படையும் அனைவரும் வழியில் டெம்பிள் ட்ரீ ஒட்டலில் தங்குகின்றனர். லுதியாவின் போனில் இருக்கும் ஆப் இறப்பவரின் பெயரை சொன்னவுடன் மர்மமான முறையில் ஒவ்வொருவராக அந்த ஒட்டலில் இறக்கின்றனர். அந்த ஒட்டலில் இருந்து வெளியேற முடியாமல் மீதி நண்பர்கள் தவிக்கின்றனர். எதனால் இந்த மர்ம மரணம்? அதற்கு காரணம் என்ன? என்பதே சஸ்பென்ஸ் நிறைந்த க்ளைமேக்ஸ்.

ராகவ், லுதியா, திவ்யன், ஆர்.என்.ஆர்.மனோகர், சபிதா ஆனந்த் மற்றும் புதுமுக நடிகர்களின் நடிப்பு படத்தின் முக்கிய நிகழ்வுகளுக்கு உறுதுணையாகவும், காட்சிகளுக்கு வலு சேர்கின்றனர்.
இளங்கோகலைவாணன் இசையும், பின்னணி இசையும் திகில் படத்திற்கான அத்தனை அம்சங்களும் நிறைந்திருக்கிறது.

அணில் கே சாமி ஒளிப்பதிவும், படத்தொகுப்பு-வி.டி.ஹீஜித் இருவரின் பங்களிப்பு படத்தில் பல பைக் சேசிங் காட்சிகள், லாரியின் துரத்தல்கள், ஒட்டல் அறைகளில் நடக்கும் மரணங்கள், திகில் சம்பவங்களை சிறப்பாக காட்சிக் கோணங்களில் கொடுத்து கைதட்டல் பெறுகின்றனர்.

இயக்கம்- டாவின்சி சரவணன்.ஐந்து ஜோடிகளின் மரணங்கள் எதனால் நிர்ணயிக்கப்படுகிறது? ஏன்? என்ற கேள்விக்கு இறுதியில் சஸ்பென்ஸ் கலந்த திரில்லோடு கடைசி வரை கொண்டு வந்து விறுவிறுப்பாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் டாவின்சி சரவணன். இதில் தவறு செய்தவர்கள் தப்பித்தாலும் அவர்களுக்கு என்றுமே தண்டனை உண்டு என்பதை பழி வாங்கும் திரைக்கதையோடு கொடுத்திருப்பதற்கு பாராட்டுக்கள்.

மொத்தத்தில் துரத்தல் மரண பயத்தை வித்தியாசப்படுத்தி கொடுத்திருக்கும் படம் வி.