விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘கட்டா குஸ்தி’ படத்தின் டிரைலர் வெளியானது..!

0
105

விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘கட்டா குஸ்தி’ படத்தின் டிரைலர் வெளியானது..!

சென்னை, இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் ‘கட்டா குஸ்தி’. இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் கருணாஸ், காளி வெங்கட், முனிஷ்காந்த், கிங்ஸ்லி, ஹரிஷ் பேரடி, அஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் வெளியாக உள்ளது. ‘கட்டா குஸ்தி’ படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். ரிச்சர்டு எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் ‘கட்டா குஸ்தி’ திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரைலர் படத்திற்கான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகப்படுத்தியுள்ளது.