விஷால் – ஆர்யா கூட்டணியில் புதிய படம்!

0
252

விஷால் – ஆர்யா கூட்டணியில் புதிய படம்! ஆனந்த் சங்கர் இயக்க மினி ஸ்டுடியோஸ் சார்பில் S வினோத்குமார் தயாரிக்கிறார்.

அரிமா நம்பி’, இருமுகன்’, நோட்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் நடிகர்கள் விஷால் மற்றும் ஆர்யாவை வைத்து தனது நான்காவது படத்தை இயக்குகிறார் . இந்த படத்தை மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் S வினோத்குமார் தயாரிக்கிறார் . இது மினி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் 9 வது தயாரிப்பாகும் . தமிழில் லென்ஸ் , வெள்ளை யானை ,மற்றும் திட்டம் இரண்டு படங்களை தொடர்ந்து 4 வது தயாரிப்பாகும் .

2011 ஆம் ஆண்டு வெளியான ‘அவன் இவன் ‘ படத்தில் விஷாலும் , ஆர்யாவும் இணைந்து நடித்தனர் . 9 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்த கூட்டணி இணைத்துள்ளது . இந்த திரைப்படம் விஷாலின் 30 படம் மற்றும் ஆர்யாவின் 32 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது . இந்த படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் RD ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார் .

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் ராமோஜி ராம் பிலிம் சிட்டியில் பூஜையுடன் துவங்க இருக்கிறது . இதர தொழிநுட்ப கலைஞர்கள் பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும் .