விஷாலின் வீரமே வாகை சூடும் டப்பிங் பணிகள் துவக்கம்

0
133

விஷாலின் வீரமே வாகை சூடும் டப்பிங் பணிகள் துவக்கம்

து.ப.சரவணன் இயக்கத்தில் வீரமே வாகை சூடும் என்ற திரைப்படம் விஷால் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, எடிட்டிங் பணிகளை முடித்த படக்குழுவினர் டப்பிங் வேலைகளை தொடங்கியுள்ளனர். இந்த திரைப்படம் யதார்த்தமான குடும்ப சென்டிமெண்ட் வகையில் உருவாகியுள்ளது என படக்குழுவினர் கூறுகின்றனர்.

அதேபோல் படத்தில் இடம்பெறும் சண்டை காட்சிகள் முக்கியத்துவம் பெறும் என்றும் தெரிவிக்கின்றனர். வீரமே வாகை சூடும் திரைப்படத்தில் டிம்பிள் ஹயாதி நாயகியாக நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். விஷாலின் எனிமி திரைப்படத்தை தொடர்ந்து வீரமே வாகை சூடும் படம் வெளியாகும் என கூறப்படுகிறது.