நடிகர் விஷாலுடன் மீண்டும் இணைந்த ஜி.வி பிரகாஷ்
நடிகர் விஷால் நடிப்பில் தற்போது ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இதனை தொடர்ந்து அவர் மார்க் ஆண்டனி என பெயர் சூட்டப்பட்ட திரைப்படத்தில் நடித்து வருகிறார். விஷாலின் 33வது படமான இதை திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.
இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. விஷாலுடன் இப்படத்தில் இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது. இதனை தொடர்ந்து இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான அசுரன், சூரரைப் போற்று போன்ற படங்களின் இசை வெற்றியை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கப்போகும் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதற்கு முன்பு கடந்த 2014 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான ‘நான் சிகப்பு மனிதன்’ படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Happy to have my dear friend @gvprakash on board for our #MarkAntony after #NaanSigappuManithan. Excited to work with him after 8 long years. GB#V33 @iam_SJSuryah @Adhikravi @vinod_offl @RIAZtheboss @UrsVamsiShekar @baraju_SuperHit pic.twitter.com/oubX5basIR
— Vishal (@VishalKOfficial) January 12, 2022