விவாகரத்துக்குப் பிறகு தனுஷும் ஐஸ்வர்யாவும் முதல் முறை சந்தித்தனர்.. என்ன நடந்தது தெரியுமா?
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கடந்த மாதம் பிரிவதாக அறிவித்து இருந்தனர். இவர்களது பிரிவிற்கு பலரிடமிருந்து பல கருத்துக்கள் வந்து கொண்டிருந்தது. மேலும் இந்தப் பிரிவு இவர்களது குடும்பத்தை சார்ந்தவர்களை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இவர்களை மீண்டும் சேர்த்து வைக்கும் முயற்சியில் இவரது நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் போன்றோர் இறங்கியுள்ளனர். இந்நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் அவரது வேலைகளில் மிகவும் பிஸியாக இருந்து வருகின்றன.
தனுஷ் வாத்தி மற்றும் திருசிற்றம்பலம் போன்ற படங்களில் பிசியாக உள்ளார். ஐஸ்வர்யா அவர் இயக்கும் ஆல்பம் பாடல்களில் ஆர்வம் காட்டி வருகிறார். இவர்கள் இருவரும் விவாகரத்துக்கு பிறகு ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்ளாமலும், பேசிக் கொள்ளாமல் இருந்தனர். ஆனால் தற்போது வந்த தகவலின் படி இவர்கள் இருவரும் ஒரு பார்ட்டியில் சந்தித்து கொண்டதாக தெரிகிறது.
சமீபத்தில் ஷூட்டிங் முடிந்து ஹைதராபாத் வந்த தனுஷும், ஐஸ்வர்யாவும் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்தும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளவில்லை. மீண்டும் சென்னை சென்ற இருவரும் (தனியாக) பொது நண்பர் பார்ட்டியில் கலந்து கொண்டதாக தெரிகிறது. பார்ட்டியில் இந்த முன்னாள் ஜோடி என்ன பேசுகிறார்கள் என்று பார்க்க அங்கு வந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் அவர்கள் ஒருவரையொருவர் தெரியாதது போல் அவர்கள் செயல்பட்டதாக நெருங்கிய வட்டாரங்களில் இருந்து வரும் தகவல் தெரிவிக்கிறது. குறைந்த பட்சம் ஒருவரையொருவர் வாய்மொழியாகக் கூட பேசாத நிலையில் இருவரும் மீண்டும் இணைவார்கள் என்ற செய்தியில் உண்மையில்லை என்பது தெளிவாகிறது.