விஜய் நடனத்தால் கவனம் ஈர்க்கும் ‘ஜாலியோ ஜிம்கானா’: பீஸ்ட் இரண்டாவது பாடல் வெளியீடு
’பீஸ்ட்’ படத்தின் ‘ஜாலியோ ஜிம்கானா’ இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.
’மாஸ்டர்’ வெற்றிக்குப்பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ’பீஸ்ட்’ வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் முதல் பாடல் ’அரபிக்குத்து’ காதலர் தினத்தையொட்டி கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகி இதுவரை 197 மில்லியன் பார்வைகளுக்கு மேல் கடந்தும் 5 மில்லியன் லைக்குகளை நெருங்கியும் பல்வேறு சாதனைகளை குவித்து வருகிறது.
இந்த நிலையில், தற்போது ’பீஸ்ட்’ படத்தின் இரண்டாவது பாடல் ‘ஜாலியோ ஜிம்கானா’ வெளியாகியுள்ளது.
கு.கார்த்திக் எழுதியுள்ள இப்பாடலுக்கு ஜானி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். கடைசியாக ‘மாஸ்டர்’ படத்தில் பாடிய ‘குட்டி ஸ்டோரி’ பாடல் போலவே அட்வஸ்களும் வாழ்க்கைத் தத்துவங்களும் நிறைந்த இந்தப் பாடலை விஜய் செம்ம ஜாலியாக பாடியுள்ளார். குறிப்பாக, கால்களாலேயே குதிரை ஓட்டுவதுபோல் உற்சாகமுடன் விஜய் நடனமாடுவது கவனம் ஈர்க்கிறது.
‘ரெண்டுல ஒண்ணுப் பார்க்கலாம் நிக்குறியா தெம்பா,எப்பவும் லைஃப் திரும்பலாம் நம்புறியா நண்பா, யாரு இங்க வந்தாலும் பயமுறுத்திப் பார்த்தாலும் அசராம சிரிச்சா ஒதுங்கிப்போவாண்டா,அத்தனையும் போனாலும் எம்டியாக நின்னாலும் பதறாம இருந்தா பீஸ்ட் நீதாண்டா’ என்று பாடியுள்ளதோடு கேஷுவலாக நடனமாடியுள்ளார் விஜய். ஜானி மாஸ்டரின் ‘ரெளடி பேபி’, ‘புட்ட பொம்மா’ பாடல்களைப் போலவே இப்பாடலின் நடனமும் இன்ஸ்டா ரீல்ஸில் நிச்சயம் வைரல் ஹிட் அடிக்கும். ’ஜாலியோ ஜிம்கானா’ வெளியான சில நிமிடங்களிலேயே 1 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.