விஜய் சேதுபதி படத்தை வேற லெவலுக்குக் கொண்டு சென்றுவிட்டார் :அல்லு அர்ஜுன் பாராட்டு!

0
324

விஜய் சேதுபதி படத்தை வேற லெவலுக்குக் கொண்டு சென்றுவிட்டார் :அல்லு அர்ஜுன் பாராட்டு!

சமீபத்தில் வெளியான ’உப்பெனா’ படத்தில் விஜய் சேதுபதியின் மிரட்டல் நடிப்பை நடிகர் அல்லு அர்ஜுன் பாராட்டி இருக்கிறார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். கடந்த ஆண்டு சிரஞ்சீவியின் ’சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் நடித்தவர், அடுத்ததாக புஜ்ஜி பாபு சனா இயக்கத்தில் ’உப்பெனா’ படத்தில் நடித்தார். இப்படம் சமீபத்தில் வெளியாகி பாராட்டுகளைக் குவித்துக் கொண்டிருக்கிறது. கடலோர மீனவ கிராமத்தைக் கொண்ட கதைக்களத்தில் சாதிவெறிக் கொண்ட தந்தையாக வில்லன் கேரக்டரில் விஜய் சேதுபதி நடிப்பில் மிரட்டி இருந்தார்.

‘பேட்ட’ படத்தைப் போலவே காதலுக்கு எதிரியாய் இப்படத்திலும் முதன்மை வேடத்தில் நடித்திருக்கிறார். தெலுங்கு சினிமா பிரபலங்கள் இப்படத்தைப் பார்த்து பாராட்டி வருகிறார்கள். அப்படித்தான், இப்படத்தைப் பார்த்த தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “விஜய் சேதுபதி சாரின் ஈர்க்கும் நடிப்பால் படத்தை வேற லெவலுக்குக் கொண்டு சென்றுவிட்டார்” என்று நெகிழ்ச்சியுடன் பாராட்டியிருக்கிறார்.