விஜய் சேதுபதியின் கடைசி விவசாயி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

0
143

விஜய் சேதுபதியின் கடைசி விவசாயி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் விஜய் சேதுபதி நடித்து வெளிவர காத்திருக்கும் கடைசி விவசாயி திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை விஜய் சேதுபதி அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் அறிவித்துள்ளார்.

காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை இயக்கிய மணிகண்டன் அடுத்ததாக இயக்கியிருக்கும் படம் ‘கடைசி விவசாயி’. விவசாயம், விவசாயிகளை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் நல்லாண்டி என்பவர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, விஜய் சேதுபதி, யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். விவசாயத்தின் அவசியத்தை உணர்த்தும் படமாக இது உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படங்களில் கடைசி விவசாயி படமும் சேரும். இந்த படம் நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளியாக தயாராகிவிட்டது. தமிழகத்தில் தற்போது ஊரடங்கு உத்தரவு மற்றும் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் திரைப்படங்களின் ரிலீஸ் அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் இந்த திரைப்படம் பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என நடிகர் விஜய் சேதுபதி அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து காத்திருந்த இப்படத்தின் அறிவிப்பு வெளியானதை ரசிகர்கள் கொண்டடி வருகின்றனர்.