விஜய்யை புகழ்ந்த ஷாருக்கான்… வைரலாகும் பதிவு

0
180

விஜய்யை புகழ்ந்த ஷாருக்கான்… வைரலாகும் பதிவு

கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கும் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான், விஜய்யை பற்றி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.

பாலிவுட் ’பாட்சா’ என்று அழைக்கப்படும் நடிகர் ஷாருக்கான் கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான ‘தீவானா’ படத்தின் மூலம்தான் பாலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமானார். இப்படம், இதே ஜூன் 25 ஆம் தேதிதான் வெளியானது. படம் வெளியாகி 29 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி இன்று ஷாருக்கான் ரசிகர்களுடன் ட்விட்டரில் கேள்வி பதில் மூலம் உரையாடினார்.

அப்போது, விஜய் ரசிகர் ஒருவர் விஜய்யின் ‘பீஸ்ட்’ செகெண்ட் லுக் போஸ்டரை பகிர்ந்து ’விஜய் குறித்து ஒரு வார்த்தையில் சொல்லுங்கள்’ என்றார். அதற்கு, ஷாருக்கான் உடனடியாக ‘வெரி கூல்’ என்று பதிலளித்துள்ளார். விஜய் ரசிகரின் இந்த கேள்விக்கான, பதில் ட்விட்டர் முழுக்க வைரலாகி வருகிறது.