விஜய்யின் 66-வது திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்..!

0
109

விஜய்யின் 66-வது திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்..!

நடிகர் விஜய் இப்போது ‘பீஸ்ட் ‘படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார்..இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது . அடுத்து விஜய் தனது 66-வது படத்தில் நடிக்க தயாராகி உள்ளார்.

இந்த படத்தை பிரபல தெலுங்கு டைரக்டர் வம்சி இயக்குகிறார். இவர் தமிழ், தெலுங்கில் வெளியான தோழா மற்றும் தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த மஹரிஷி, ராம்சரண் நடித்த எவடு உள்ளிட்ட படங்களை டைரக்டு செய்துள்ளார்.

இந்நிலையில் விஜய்யின் 66-வது படம் குறித்து அந்த படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தெலுங்கு தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், ‘ விஜய் ’66’ திரைப்படம், குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் . ஆக்சன் ,காமெடி , செண்டிமெண்ட் , என ஒரு கமர்ஷியல் திரைப்படமாக இருக்கும் . இந்த படத்தின் படப்பிடிப்பை வரும் மார்ச் மாதம் தொடங்க திட்டமிட்டு உள்ளோம். படத்தை தீபாவளி அல்லது அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு கொண்டு வருவோம்” என்றார்.