விஜய்யின் காரில் பீஸ்ட் குழுவினர் ஜாலி ரெய்ட்: இணையத்தில் வீடியோ வைரல்

0
143

விஜய்யின் காரில் பீஸ்ட் குழுவினர் ஜாலி ரெய்ட்: இணையத்தில் வீடியோ வைரல்

நடிகர் விஜய் தனது சொகுசு ரோல்ஸ் ராய்ஸ் காரில் பீஸ்ட் படக்குழுவினரை ரெய்டுக்கு அழைத்துச் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் விஜய் நடித்துள்ள ‘பீஸ்ட்’ படத்துக்கு டிக்கெட் புக்கிங்க் மும்முரமாக நடந்துவருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் படம் விஜய்க்கு முதல் பான் -இந்தியா ரிலீஸ் படமாக அமையவுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கியுள்ள பீஸ்ட் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அத்துடன் இதில் யோகி பாபு, செல்வராகவன், அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு சாதனை படைத்து வருகிறது. ஏற்கெனவே இப்படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியான நிலையில் 3வது பாடலாக ‘பீஸ்ட் மோடு’ எனும் பாடல் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி, இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்துக்குத் தணிக்கைக் குழு ‘U/A’ சான்றிதழ் வழங்கியுள்ளது. அத்துடன் இதுவரை இல்லாத அளவில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குவைத் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் இந்த திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும் மற்ற நாடுகளில் இந்த படத்தை எதிர்பார்த்து கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது பீஸ்ட் படம் குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன்படி தற்போது பீஸ்ட் படக்குழுவினருடன் விஜய்யின் சொகுசு ரோல்ஸ் ராய்ஸ் காரில் செல்லும் வீடியோவை இணையதளங்களில் வைரலாகி வருகிறது. தளபதி விஜய் காரை ஓட்டி வருகிறார் என்பதும் இந்த காரின் உள்ளே நெல்சன் பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.