விக்னேஷ் சிவனின் காத்துவாக்குல ரெண்டு காதல் அக்டோபர் மாதம் ரிலீஸ்!

0
191

விக்னேஷ் சிவனின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ அக்டோபர் மாதம் ரிலீஸ்!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனமும், விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சமந்தா, நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில், காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தை வருகிற அக்டோபர் மாதம் ஆயுத பூஜை விடுமுறையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு, அடுத்த மாதம் முழுமையாக முடிவடைந்துவிடுமாம். இதையடுத்து பின்னணி பணிகளை வேகமாக முடித்து, படத்தை அக்டோபர் மாதம் ரிலீஸ் செய்ய உள்ளார்களாம்.