வானம் இலக்கிய விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது எழுத்தாளர் ராஜ் கவுதமனுக்கு நீலம் பண்பாட்டு மையம் சார்பாக வழங்கப்பட்டது

0
121

வானம் இலக்கிய விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது எழுத்தாளர் ராஜ் கவுதமனுக்கு நீலம் பண்பாட்டு மையம் சார்பாக வழங்கப்பட்டது.

இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் பண்பாட்டுமையம் சார்பாக ஏப்ரல் மாதம் முழுவதும் தலித் வரலாற்று மாத நிகழ்வாக கலைத்திருவிழா, ஓவியகண்காட்சி, திரைப்படவிழா, மற்றும் புகைப்படக்கண்காட்சி என தொடர்ந்து நடத்திவருகிறார்.

அதன் தொடர்ச்சியாக மதுரையில் தலித் எழுத்தாளர்களுக்கான , தலித் இலக்கியகூடுகை நிகழ்வு ஏப்ரல் 29,30 தேதிகளில் மதுரை உலகத்தமிழ்சங்கம் அரங்கில் நடைபெற்றது.

இதில் எழுத்தாளர் ஆய்வாளர் ராஜ் கவுதமன் அவர்களுக்கு வானம் இலக்கியவிருது , வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.