வனம் விமர்சனம்: எழிலான காட்சிக்கோணங்களில் வசப்படுத்துகிறது வனம்
கோல்டன் ஸ்டார் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் கிரேஸ் ஜெயந்தி ராணி, ஜே. பி அமலன், ஜே.பி அலெக்ஸ் தயாரிப்பில் வனம் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஸ்ரீகண்டன் ஆனந்த்.
இதில் வெற்றி, ஸ்ம்ருதி வெங்கட், அனுசித்தாரா, வேலராமமூர்த்தி , அழகம்பெருமாள், பிரதீப், தேசிங்குராஜா ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு விக்ரம் மோகன், இசை: ரான் ஈத்தன் யோஹான், எடிட்டிங் : பிரகாஷ் மப்பு, கலை: வீரமணி கணேசன், ஸ்டண்ட் : சுதீஷ், பாடல் : ஞானகரவேல், திரைக்கதை : ஸ்ரீகண்டன் ஆனந்த், மாதவா, ஐசக் பசில், திரைக்கதை மேற்பார்வை : சாப் ஜான் எடதட்டில், வசனம்: ஐசக் பசில், எக்சிகியூடிவ் ப்ரொட்யூசர் : துளசி ராமன், மக்கள் தொடர்பு: நிகில்
மலைக்கிராமத்தில் சிற்பக்கலைக் கல்லூரியில் படிக்க வருகிறார் வெற்றி, அவருடன் இரண்டு நண்பர்கள் தங்குகின்றனர். அந்த கல்லூரியைப்பற்றி ஆவணப்படம் எடுக்க வருகிறார் வெற்றியின் தோழி ஸ்மிருதி வெங்கட். எதிர்பாராதவிதமாக அந்த அறையில் வினோதமான நிகழ்வுகள் நடக்க நண்பர்கள் இருவரும் தற்கொலை செய்து கொல்கிறார்கள். வெற்றி இதற்கான காரணத்தை அறிய முற்படுகிறார். அவருக்கு உதவியாக ஸ்மிருதி வெங்கட் இணைய கல்லூரியைப் பற்றி உண்மைகளை கண்டுபிடித்தார்களா? அந்த அறையில் இருக்கும் மர்மம் என்ன? எதனால் இவ்வாறு நடக்கிறது? என்பதே மீதிக்கதை.
ஒளிப்பதிவாளர் விக்ரம் மோகனின் அற்புதமான கேமிரா கோணங்கள் வனம் கதைக்கேற்ப காடுகளையும், இயற்கையையும் அழகாக படம் பிடித்து பூர்வ ஜென்ம பிறவி பற்றி காட்டும் இறுதி சண்டைக்காட்சிகளில் சிறப்பாக கொடுத்து அசத்தியுள்ளார்.
ரான் ஈத்தன் யோஹான் த்ரில்லர் படத்திற்கேற்ற இசை கோர்வையில் கவனிக்க வைக்கிறார்.
ஸ்ரீகண்டன் ஆனந்த், மாதவா, ஐசக் பசில் திரைக்கதையும், வசனங்களும் படத்தின் காட்சிகளுக்கு இன்னும் உழைத்திருக்கலாம்.
முன் ஜென்மத்தை காட்டும் அற்புத திறன் கொண்ட மாயக்கண்ணாடி, சைக்கோ ஜமீன்தார், மலைவாழ் மக்கள், மறுபிறபி, ஆமானுஷ்ய சக்தி, சிற்பக்கலைக்கல்லூரி என்று கதைக்களம் நன்றாக இருந்தாலும், அதை காட்சிப்படுத்திய விதம் கொஞ்சம் தோய்வை ஏற்படுத்தினாலும் இறுதிக் காட்சியில் அதை சரி செய்து விடுகிறார் இயக்குனர் ஸ்ரீகண்டன் ஆனந்த்.
மொத்தத்தில் வனம் எழிலான காட்சிக்கோணங்களில் வசப்படுத்துகிறது.