வட்டி வசூலிக்கும் ஓடிடி நிறுவனங்கள்: ஓடிடி-யை குற்றம்சாட்டிய இயக்குனர் சீனு ராமசாமி
கொரோனா காலக்கட்டத்தில் திரையரங்குகள் மூட்டப்பட்ட நிலையில் ஓடிடி நிறுவனங்கள் அதனுடைய பணியை சிறப்பாக செய்து வந்தது. திரையரங்குகளின் ரசிகர்களை போன்றே ஓடிடி-யில் வெளியாகும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிகரித்து வந்தனர். சினிமாவின் தவிர்க்க முடியாத சக்தியாக ஓடிடி இன்று வளர்ந்திருக்கின்றன. ஓடிடி-யை நம்பி படங்கள் எடுக்கப்படுவதும் அதிகரித்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களின் ஒருவரான சீனு ராமசாமி ஓடிடி நிறுவனங்கள் மீது ஆதங்கத்தோடு ஒரு குற்றச்சாட்டை அவருடைய சமூக வலைத்தளத்தல் பக்கத்தில் முன் வைத்துள்ளார். “சொன்ன தேதியை விட திரைப்படத்தை சற்றுத் தள்ளி வெளியிட்டால் தந்த அட்வான்ஸ் தொகைக்கு வட்டி வசூலிக்கின்றன சில ஓடிடி நிறுவனங்கள். கதைக்கு முக்கியத்துவம் தரும் தயாரிப்பாளர்கள் வளர்ந்தால் தானே ஓடிடி நிறுவனங்களுக்கு பெருமை, கதை படங்கள் வளரும். புதியவர்கள் தழைப்பர்..” எனும் குற்றச்சாட்டு தான் அது.
இந்த பதிவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவருகிறது.
சொன்ன தேதியை
விட திரைப்படத்தை சற்று தள்ளி
வெளியிட்டால் தயாரிப்பாளரிடம்
தந்த அட்வான்ஸ்
தொகைக்கு வட்டி வசூலிக்கின்றன
சில ஓடிடி நிறுவனங்கள்'content based films'
தயாரிப்பாளர்கள்
வளர்ந்தால் தானே
ஓடிடி நிறுவனங்களுக்கு
பெருமை
கதை படங்கள் வளரும்
புதியவர்கள் தழைப்பர்?#ஓடிடி #OTT— R.Seenu Ramasamy (@seenuramasamy) January 4, 2022