வசந்த பாலனின் ‘ஜெயில்” திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்: எம்.பி சு.வெங்கடேசன்

0
161

வசந்த பாலனின் ‘ஜெயில்” திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்:
எம்.பி சு.வெங்கடேசன்

இயக்குநர் வசந்தபாலனின் ‘ஜெயில்’ திரைப்படம் வெற்றி பெற மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயில்’ திரைப்படத்தில் நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாகவும், அபர்ணதி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 9ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.

இந்நிலையில், இந்த திரைப்படத்திற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ” எளிய மக்களின் வாழ்வியலை பொதுச்சமூகத்தின் முன் அங்காடித்தெரு என்ற மகத்தான படைப்பாக தந்தவர் இயக்குநர் வசந்தபாலன். அந்தத் தொடர்ச்சியில் தற்போது நகரத்து அடித்தட்டு மக்களின் இன்னல்களை முன்வைத்து திரைக்கு வரவிருக்கும் வசந்தபாலனின் ‘ஜெயில்’ திரைப்படம் வெற்றிபெற எனதன்பு வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.