லூசிபர் தெலுங்கு ரீமேக் பற்றி பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சிரஞ்சீவி

0
210

லூசிபர் தெலுங்கு ரீமேக் பற்றி பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சிரஞ்சீவி

மலையாளத்தில் மோகன்லால் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ‘லூசிபர்’. இந்தியாவையே மிரள‌ வைத்த இந்த படத்தில் மோகன்லால் அரசியல்வாதியாகவும், அண்டர்கிரவுண்ட் கேங்ஸ்டராகவும் நடித்திருந்தார். இப்படத்தை பார்த்த தெலுங்கு நடிகர் ராம்சரண், தன் தந்தை சிரஞ்சீவிக்கு இந்தக் கதை பொருத்தமாக இருக்கும் என கருதி, அதன் தெலுங்கு ரீமேக் உரிமையை கைப்பற்றினார்.

தமிழில், ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், தனி ஒருவன் போன்ற படங்களை இயக்கி பிரபலமான மோகன்ராஜா, லூசிபர் தெலுங்கு ரீமேக்கை இயக்க ஒப்பந்தமானார். இப்படத்திற்கு கடந்த ஜனவரி மாதமே பூஜை போடப்பட்ட நிலையிலும், படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது.

படத்தின் கதையில் மோகன் ராஜா செய்த மாற்றங்கள் சிரஞ்சீவிக்கு பிடிக்காததால், மோகன் ராஜா இப்படத்திலிருந்து விலகி விட்டதாக தகவல் பரவி வந்தன.

இந்நிலையில், சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய மோகன் ராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சிரஞ்சீவி. இதுதவிர லூசிபர் தெலுங்கு ரீமேக்கை தயாரிக்கும் நிறுவனமும் மோகன் ராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து போஸ்டர் வெளியிட்டது. கொரோனா பரவல் குறைந்தபின் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளார்களாம்.