‘லியோ’வோடு மோதும் ‘திரையின் மறுபக்கம்’

0
170

‘லியோ’வோடு மோதும் ‘திரையின் மறுபக்கம்’

திரையின் மறுபக்கம் எனும் திரைப்படம் உண்மையும் நகைச்சுவையும் சார்ந்த கதை. இப்படத்தை நிதின் சாம்சன் (Nitin Samson) இயக்கியதோடு மட்டுமல்லாமல் கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு ஆகிய பணிகளை மேற்கொண்டு உள்ளார். சென்னை, செங்கல்பட்டு, அமெரிக்கா (புளோரிடா) ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தி உள்ளார்.

அக்டோபர் 20 ந்தேதி முதல் தமிழகமெங்கும் 60 தியேட்டர்களில் ரீலீசாகிறது.

நடிகர்கள்: முகமது கவுஸ், மணிகண்டன், ஹேமா ஜெனிலியா, நிதின் சாம்சன், ஸ்ரீ ரிஷா, ஜோதி, யாசர், சத்தியண்ணதுரை.

இயக்கம், கதை, ஒளிப்பதிவு, தயாரிப்பாளர் – நிதின் சாம்சன்

இசை – அனில் என் சி

எடிட்டிங் – நிஷாந்த் ஜேஎன்எஸ்

BGM – JKV ரித்திக் மாதவன்

DI – பங்கஜ் ஹல்தேர்

பிஆர்ஓ – சிவக்குமார்

படத்தைப் பற்றி இயக்குனர் கூறியதாவது:

தமிழ் சினிமா ரசிகர் சத்யமூர்த்தி ஓரு விவசாயி. அவர் வாயால் வடை சுடுகிற இயக்குனர் செந்திலிடம் ஏமாந்து அவர் நிலத்தை வைத்து ஓரு படம் தயாரிக்கிறார்.

இயக்க வழி தெரியாமல் திறமை இல்லாத செந்தில் சத்ய மூர்த்தியின் வீட்டை திரைப்பட பைனான்சியர் அன்பரசியிடம் அடமானம் வைக்கிறார்.

இயக்குனர் செந்தில் படம் பண்ணுவதில் பயங்கரமாக சொதப்ப விவசாயி சத்யமூர்த்தி செந்திலை நீக்கி விட்டு படத்தின் ஹிரோ, துணை இயக்குனர் உதவியோடு படத்தை முடிக்கிறார். அன்பரசியின் கழுகுப்பிடியிலிருந்து சத்யமூர்த்தி தப்பினாரா ..? படத்தை எப்படி வெளியே கொண்டு வரப்போகிறார் என்பதே கதை.