லதா மங்கேஷ்கர் மறைவிற்கு தமிழ் திரையுலகினர் அஞ்சலி

0
101

லதா மங்கேஷ்கர் மறைவிற்கு தமிழ் திரையுலகினர் அஞ்சலி

இந்தி திரைப்பட உலகின் மூத்த பாடகி லதா மங்கேஷ்கர் (வயது 92) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

கடந்த சில தினங்களாக லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக் கிடமாகவே இருந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலையை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், நேற்று அவரது உடல்நிலை சற்று சீரடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இன்று காலையில் லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது அவர் காலமானார். இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகை காஜல் அகர்வால், நடிகை ஜெனிலியா, நடிகை தமன்னா, நடிகை ஹன்சிகா, நடிகர் விக்ரம் பிரபு, பாடகி சின்மயி போன்ற பலர் அவர்களுடைய அஞ்சலியை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

லதா மங்கேஷ்கருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா மற்றும் பத்ம பூஷன், பத்ம விபூஷன் மற்றும் தாதா சாகேப் பால்கே விருதுகளை மத்திய அரசு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.