ரொமாண்டிக் படத்தில் பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் ‘குக் வித் கோமாளி’ பவித்ரா

0
233

ரொமாண்டிக் படத்தில் பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் ‘குக் வித் கோமாளி’ பவித்ரா

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகிய குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், கலந்துக் கொண்ட போட்டியாளர் பவித்ரா லட்சுமி நடிகர் கதிருடன் ஒரு ரொமாண்டிக் படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார்.

அடிப்படையில் டான்சரான பவித்ரா லட்சுமி, விளம்பரங்களிலும், குறும்படங்களிலும் நடித்து வந்தார். பின்பு விஜய் டிவி-யில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். இந்நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர்.

இதையடுத்து நடிகை பவித்ரா தற்போது படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். ஏற்கனவே மலையாளத்தில் ஒரு படம் நடித்திருந்தாலும், இப்போது தமிழிலும் ஹீரோயினாக அறிமுகமாகிறார். அவர் நடிக்கும் முதல் தமிழ் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் நகைச்சுவை நடிகர் சதீஷுக்கு ஜோடியாக பவித்ரா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், நடிகை பவித்ரா மேலும் ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தில் அவர், நடிகர் கதிருக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம். இதனை புதுமுக இயக்குனர் ஒருவர் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. ரொமாண்டிக் படமாக உருவாகவிருக்கும் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.