ரேவதி இயக்கத்தில் கஜோல் இணையும் ‘தி லாஸ்ட் ஹர்ரே’: அதிகாரபூர்வ அறிவிப்பு

0
162

ரேவதி இயக்கத்தில் கஜோல் இணையும் ‘தி லாஸ்ட் ஹர்ரே’: அதிகாரபூர்வ அறிவிப்பு

நடிகை, இயக்குநர் என்று பன்முகத்திறமை கொடண்ட நடிகை ரேவதி நடிப்பில் சமீபத்தில் ‘நவரசா’ வெளியானது. இந்த நிலையில், மீண்டும் இயக்கத்திற்குத் திரும்பியுள்ளார் நடிகை ரேவதி. ஏற்கெனவே, ‘மித்ர், மை பிரெண்ட்’, ’பிர் மிலேங்கே’, ’கேரளா கஃபே’, ’மும்பை கட்டிங்’உள்ளிட்டப் படங்களை இயக்கியுள்ள நிலையில், 5 வது படத்தை இயக்கவிருக்கிறார்.

இதில், பாலிவுட் நடிகை கஜோல் நாயகியாக நடிக்கிறார். இதனை, கஜோல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உற்சாகமுடன் ரேவதியுடன் இருக்கும் புகைப்படத்துடன் தெரிவித்திருக்கிறார். படத்திற்கு ‘தி லாஸ்ட் ஹர்ரே’ என்று பெயரிட்டுள்ளனர்.