ராணா டகுபதி மற்றும் வெங்கடேஷ் டகுபதி நடிப்பில்,  Netflix வழங்கும் “ராணா நாயுடு” இணைய தொடர்!

0
140

ராணா டகுபதி மற்றும் வெங்கடேஷ் டகுபதி நடிப்பில்,  Netflix வழங்கும்ராணா நாயுடுஇணைய தொடர்!

~ Ray Donovan திரைத்தொடரிலிருந்து தழுவப்பட்ட  இந்திய தொடரில், இரண்டு சூப்பர்ஸ்டார்கள் முதல் முறையாக இணைகிறார்கள் ~

செப்டம்பர் 22, 2021 : பாலிவுட் பிரபலங்களின் போன் புக்கில் முதல் ஆளாக யார் இருக்கிறார்கள் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அதற்கான பதில் Netflix ல்  உள்ளது – ராணா நாயுடு”   அவரால் சரிசெய்ய முடியாத பிரச்சனை என்று எதுவுமே இல்லை.

இரண்டு சூப்பர்ஸ்டார்கள், சக்திமிக்க அதிரடி ஆக்சன் கதை மற்றும் Netflix, இது தான்  ரசிகர்களின் ஏக்கத்தை  பூர்த்தி செய்யும் தாரக மந்திரம். இந்த விருந்தில் இன்னும் சில ஆச்சர்யங்கள் சேர்க்கும் வகையில், பாகுபலி பல்வாள் தேவனாகிய ராணா டகுபதியும், அவரது மாமாவும், சூப்பர்ஸ்டாருமாகிய வெங்கடேஷ் டகுபதியும் திரையில் முதல் முறையாக,  Netflix  உடைய கிரைம் டிராமா தொடரான ராணா நாயுடு”  இணைய தொடரில் ஒன்றாக இணைந்து, தோன்றவுள்ளார்கள்.ராணா நாயுடு” தொடரை Locomotive Global Inc நிறுவனம் தயாரிக்கிறது. அமெரிக்காவில் மிகவும்  பிரபலமான  SHOWTIME® கிரைம் தொடரான  “Ray Donovan”  தொடரின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக உருவாகும், இத்தொடரின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

இந்த தொடர் பாலிவுட் பணக்கார உலகில், எந்த பிரச்சனையையும் சரி செய்யும்,  பிக்ஸராக வலம் வரும், ரணா நாயுடுவின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகிறது.  இந்த தொடரின் அதிகாரப்பூர்வ உரிமையை ViacomCBS Global Distribution Group பெற்றுள்ளது. தொடரின் ஒருங்கிணைப்பாளராகவும் (showrunner), இயக்குநராகவும்  கரண் அன்ஷுமான் செயல்படவுள்ளார், இணை இயக்குநராக  சுபர்ன் வர்மா இத்தொடரை இயக்கவுள்ளார்.

இந்தத் தொடரைப் பற்றி, ராணா டகுபதி கூறுகையில் , “இத்தொடர் எனக்கு பல சிறப்பான முதல் தருணங்களை தந்துள்ளது . Netflix உடைய  நீண்ட கதை சொல்லல் பாணியில், என் மாமா வெங்கடேஷ்

உடன் முதல் முறையாக பணிபுரிவது, எங்கள் வாழ்க்கையில் நாங்கள் இருவரும், இதுவரை  செய்ததிலிருந்து  முற்றிலும் மாறுபட்டது. இந்த வகை கதை சொல்லல் பாணியில், வித்தகர்களாக திகழும்,  ஒரு குழு மற்றும் ஒரு தளத்துடன் இணைந்து இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது மிகவும் புதிய அனுபவமாகவும், சவாலானதாகவும் இருக்கும்.  நிச்சயமாக மகிழ்ச்சியான அனுபவங்கள் கொண்டிருக்கும். இத்தொடரின் படப்பிடிப்புக்காக ஆவலுடன்  காத்திருக்கிறேன் என்றார்.

வெங்கடேஷ் டகுபதி கூறியதாவது…

ராணா வுடன் இணைந்து பணிபுரிவதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளேன் , நாங்கள் இருவரும் இணைந்து பணிபுரியும் ஓர் அற்புதமான படைப்பாக இந்த தொடர்  அமையும், நான் Ray Donovan  தொடரின் மிகத்தீவிர ரசிகன்.  நானும் எங்களது குழுவும் இந்த ரீமேக்கில் அந்த தொடருக்கான நியாயத்தை தர, அனைத்து பணிகளையும்  சிறப்பாக செய்வோம் என்றார்.

மோனிகா செர்கில், VP, Content, Netflix India  கூறியதாவது…

ராணா டகுபதி மற்றும் வெங்கடேஷ் டகுபதி என்கிற  இரண்டு திறமைமிகுந்த பெரிய நடிகர்களை,  Netflix  மூலம் ஒரு தொடரில்  முதல் முறையாக  இணைத்தது மிகப்பெரும் மகிழ்ச்சி. உலகளாவிய புகழ்பெற்ற தொடரின் அற்புதமான  இந்திய தழுவலாக ராணா நாயுடு இரு சூப்பர்ஸ்டார்களின் கூடணியில்  ரசிகர்களை மிகப்பெரிய அளவில் ஆச்சர்யப்படுத்தும்.

ரோக்சானே போம்பா, Vice President, Formats at ViacomCBS Global Distribution Group கூறியதாவது…

சுந்தர் ஆரோன் உடைய  Locomotive Global Inc. மற்றும்  NETFLIX  உடன் இணைந்து உலகளாவிய புகழ் கொண்ட Ray Donovan தொடரை, இந்திய சந்தைக்காக ராணா நாயுடு தொடராக உருவாக்குவது எங்களுக்கு மிகப்பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. இத்தொடரில் கதைக்களங்களின் தழுவல் மற்றும் கதாபாத்திரங்களின் மாற்றம் உள்ளூர் நிலப்பரப்பு மற்றும் கலாச்சாரத்திற்கு எவ்வளவு நன்றாக பொருந்துகின்றன என்பதைப் பார்ப்பது மிகப்பெரும் ஆச்சர்ய்ததை அளிக்கிறது.

Locomotive Global Inc சார்பில் சுந்தர் ஆரோன் கூறியதாவது…

“ராணா நாயுடு” ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்  மிகச்சிறந்த திரில்லர் தொடராக இருக்கும். இத்தகைய மிகப்பிரமாண்ட படைப்பை Netflix மற்றும் எங்கள் உயர்தர நடிகர்கள், தொடர் ஒருங்க்கிணைப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பு குழு ஆகியவற்றுடன் இணைந்து வழங்க்குவது LGI க்கு கிடைத்த மிகப்பெரும் பாக்கியம் மற்றும் எங்களுக்கான மிகப்பெரிய பொறுப்பு ஆகும்.

Credits:

நடிகர்கள்  | ராணா டகுபதி, வெங்கடேஷ் டகுபதி

Showrunner | கரண் அன்ஷுமன்

இயக்குனர்கள் | கரண் அன்ஷுமன், சுபர்ன் வர்மா

தயாரிப்பாளர்கள்   | சுந்தர் ஆரோன் (Locomotive Global Media LLP), CBS/Showtime