ரஹ்மானின் குரலில் கவனம் ஈர்க்கும் சிம்புவின் வெந்து தணிந்தது காடு கிளிம்ப்ஸ்!

0
128

ரஹ்மானின் குரலில் கவனம் ஈர்க்கும் சிம்புவின் வெந்து தணிந்தது காடு கிளிம்ப்ஸ்!

மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து, சிம்பு அடுத்ததாக கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐசரி கணேசன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். நடிகை ராதிகா, இப்படத்தில் சிம்புவின் தாயாராக நடிக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் சிம்பு, முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆக்‌ஷன் கலந்து வெளியிடப்பட்டுள்ள இப்படத்தின் டீசர் தற்போது ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.