ரத்தத்தை சாட்சியாக கொண்டு தீட்டப்பட்ட ஒரு திரைப்படம்…
ஆஹா ஓடிடி தமிழ் மற்றும் மகிழ் மன்றம் இணைந்து தயாரித்துள்ள புதிய படத்திற்கு ‘ரத்தசாட்சி’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழின் முன்னணி எழுத்தாளரும் பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட வெற்றிப்படங்களின் வசனகர்த்தாவும் ஆகிய திரு. ஜெயமோகன் எழுதிய ‘கைதிகள்’எனும் சிறுகதையை தழுவி ரத்த சாட்சி திரைப்படம் உருவாகியுள்ளது.
இந்தக் கதையை திரைப்படமாக உருவாக்குவதில் பிரபலமான பல தமிழ் இயக்குனர்கள் ஆர்வம் காட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஹா தமிழ் மற்றும் மகிழ் மன்றம் இணைந்து தயாரித்துள்ள படத்தின் தலைப்பை “ரத்தசாட்சி” என இன்று அறிவித்துள்ளனர்.
இப்படம்,பிரபல எழுத்தாளரும் “பொன்னியின் செல்வன்” மற்றும் “வெந்து தணிந்தது காடு” போன்ற படங்களுக்கு கதை, வசனம் எழுதிய திரு. ஜெயமோகனின் படைப்புகளின் ஒன்றான “கைதிகள்” என்னும் சிறுகதையாகும். திரு.ஜெயமோகனின் கூற்றுப்படி, ரத்தசாட்சி உருவானக் கதை மற்றொரு திரைப்படத்தின் பொருளாக இருக்கத் தகுதியானது…”ரஃபிக் இஸ்மாயில் என்னும் இயக்குனர் என்னை அணுகி கைதிகளை திரைப்படமாக்க விரும்பினார், இந்த சம்பவம் நடந்த மூன்று மாதங்களுக்குள் பிரபல இயக்குனர் திரு.மணிரத்னம் இக்கதையை திரைக்கு மாற்ற நினைத்தார், கதையின் உரிமையைப் பெற பிரபல இயக்குனர் திரு.வெற்றிமாறன் என்னை அணுகினார், மேலும் கதை ஏற்கனவே ரஃபிக்கிடம் கொடுக்கப்பட்டதாக அவர்களிடம் தெரிவித்தேன்”.
இப்படத்தை திரு.ரஃபீக் இஸ்மாயில் இயக்கியுள்ளார், திரு.ஜாவேத் ரியாஸ் இசை சேர்த்துள்ளார் , திரு.ஜெகதீஷ் ரவி ஒளிப்பதிவு செய்துவுள்ளார்.
ஆயுதப் படைகளுக்குள் மனிதாபிமானம் இருக்கிறதா? இருவரின் வாழ்க்கையை அது எவ்வாறு பாதிக்கிறது? என்பதற்கு இப்படம் சான்றாகும்.
படத்தில் கண்ணா ரவி, ஹரிஷ் குமார், இளங்கோ குமரவேல், கல்யாண் மாஸ்டர், மெட்ராஸ் சார்லஸ் நடித்துள்ளனர்.
திருமதி அனிதா மகேந்திரன் தயாரிக்கும் இந்தப் படத்தை ‘ஆஹா தமிழ் OTT’ தளம் விரைவில் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.
AHA 100% தமிழ் என்டர்டெயின்மென்ட் OTT பிளாட்ஃபார்ம், பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் (ஜிவி 2, குருதி ஆட்டம், மாமனிதன், கூகுள் குட்டப்பா, மன்மத லீலை, ரைட்டர் ) மற்றும் பல்வேறு வகைகளான வெப் தொடர்களின் மூலம் தமிழ் மக்களின் இதயங்களை வென்று வருகிறது. (பேட்டைக்காளி, அம்முச்சி 2, ஈமோஜி, அன்யாஸ் டுடோரியல், ஆகாஷ் வாணி, இரை) இவை அனைத்து ஒரு நாளைக்கு வெறும் ரூ.1 மட்டுமே.