ரஜினி, விஜய்க்கு அடுத்து சிவகார்த்திகேயன் தான்..! பிரபல விநியோகஸ்தர் அன்புச்செழியன் பளீச்..!!

0
168

ரஜினி, விஜய்க்கு அடுத்து சிவகார்த்திகேயன் தான்..!

பிரபல விநியோகஸ்தர் அன்புச்செழியன் பளீச்..!!

ரஜினி, விஜய் வரிசையில் எல்லோருக்கும் பிடித்த கதாநாயகனாக சிவகார்த்திகேயன் உள்ளார் என்று பிரபல விநியோகஸ்தர் அன்புச் செழியன் பாராட்டியுள்ளார்.

சிவகார்த்திகேயன், மரியா ரியாபோஷப்கா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் பிரின்ஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கியுள்ளார். தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

தீபாவளியையொட்டி வரும் வெள்ளியன்று இந்தப் படம் திரைக்கு வருகிறது. இதையொட்டி படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள். அந்த வகையில் பிரின்ஸ் படத்தின் பிரஸ்மீட் சமீபத்தில் நடைபெற்றது.

இதில் பிரபல தமிழ் சினிமா விநியோகஸ்தர் அன்புச்செழியன் சிவகார்த்திகேயன் பாராட்டி பேசினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது-

பிரின்ஸ் படத்தை தமிழகம் முழுவதும் எங்களது நிறுவனம் மூலமாக வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். ஏறக்குறைய 650 திரையரங்குகளில் இந்தப் படத்தை வெளியிட முயற்சி மேற்கொண்டுள்ளோம்.

வழக்கமான சிவகார்த்திகேயன் படம் போன்று, இந்த படமும் ஹிட்டாகி விடும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. தமிழ் சினிமாவில் எல்லோருக்கும் பிடித்த ஹீரோவாக ஒரு சிலர் இருப்பார்கள். முதலில் மறைந்த எம்ஜிஆர் அவர்கள் இருப்பார்கள். அதற்கு பின்னர் ரஜினி சார். அதற்கு பின்னர் விஜய் சார். அந்த வரிசையில் இன்றைக்கு சிவகார்த்திகேயன் எல்லோருக்கும் பிடித்த ஹீரோவாக இருக்கிறார்.

அவர் நடித்த பிரின்ஸ் படத்தை ரிலீஸ் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த தீபாவளி சிவகார்த்திகேயன் தீபாவளி என்பதில் எங்களுக்கு சந்தோசமாக உள்ளது. ஏனென்றால் குழந்தைகளும் சந்தோஷமாக பார்த்துவிட்டு போகக்கூடிய படமாக இந்த படம் அமையும்.

பிரின்ஸ் படத்தின் இயக்குனர் அனுதீப் தமிழில் தொடந்து பல படங்களை இயக்க வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.” என்று கூறினார்.