ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் ‘காவாலா’ பாடல் வெளியீடு

0
216

ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் ‘காவாலா’ பாடல் வெளியீடு

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. இப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரெடின் கிங்ஸ்லி, ரம்யா கிருஷ்ணன், விநாயகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்த நிலையில் அண்மையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதையடுத்து, படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில், அனிருத் இசையமைப்பில், தமன்னாவின் துள்ளல் நடனத்தில், ஷில்பா ராவ் மற்றும் அனிருத் பாடியுள்ள ‘காவாலா’ பாடல் வெளியாகியுள்ளது. இயக்குநரும், பாடலாசிரியருமான அருண்ராஜா காமராஜ் இந்தப் பாடலை எழுதியுள்ளார்.