ரசிகர்களை கவர்ந்த அஜித் மகளின் லேட்டஸ்ட் புகைப்படம்!

0
141

ரசிகர்களை கவர்ந்த அஜித் மகளின் லேட்டஸ்ட் புகைப்படம்!

நடிகர் அஜித் மகள் அனோஷ்காவின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

நடிகர் அஜித் தான் செய்யும் ஒவ்வொரு செயலாலும் ரசிகர்களை ஈர்த்து வருகிறார். அவரை திரையிலும், பொதுவெளியிலும் பார்க்க காத்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். நடிப்பை தவிர மறுபுறம் துப்பாக்கி சுடுதல், பைக் ட்ரிப் என பிஸியாக இருக்கிறார் அஜித். அவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் லைக்ஸை குவிக்கும்.

அம்மா – சித்தியுடன் அனோஷ்கா

தீபாவளியன்று ஷாலினி மற்றும் நண்பர்களுடன் அஜித் எடுத்துக் கொண்ட படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தன. சிவப்பு சட்டையும் வெள்ளை வேட்டியும் அணிந்து எளிமையான தோற்றத்தில் மாஸாக இருந்தார்.

தற்போது தல அஜித்தின் மகள் அனோஷ்கா அஜித்தின் புதிய புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது. அவர் வளர்ந்து தனது தாய் மற்றும் சித்தி ஷாம்லி அளவுக்கு உயரமாக இருப்பதால், ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர். மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அவர் அஜித்தை போன்று கண்ணாடி அணிந்துள்ளார்.

அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.