ரசிகர்களின் பாராட்டு மழையில்  நடிகர் அஷ்வின் காகுமானு!

0
161

ரசிகர்களின் பாராட்டு மழையில்  நடிகர் அஷ்வின் காகுமானு!

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் Disney + Hotstar தளத்தில் வெளியான Hotstar Specials ன் “LIVE TELECAST” இணைய தொடர், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இத்தொடரில் வித்தியாசமான பாத்திரத்தில் அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கும் அஷ்வின் காகுமானு ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார்.

இது குறித்து அஷ்வின் காகுமானு கூறியதாவது…

“LIVE TELECAST” இணைய தொடரில் எனது கதாப்பத்திரம் மற்றும் நடிப்பு குறித்து ரசிகர்கள் பாராட்டி வருவது பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. அத்தனை புகழும் இயக்குநர் வெங்கட்பிரபு அவர்களையே சேரும். இப்பாத்திரத்தில் என்னை தேர்ந்தெடுத்ததற்கு, அவருக்கு நன்றி. “சின்னா” எனும் கதாப்பாத்திரத்தை மிகவும் உணர்வுபூர்வமாகவும், பல அதிரடி தருணங்களுடன் அவர் உருவாக்கியிருந்தார். அதனால் தான் என்னால் நல்ல நடிப்பை தர முடிந்தது. மங்காத்தா படம் முடிந்து, 10 வருட நீண்ட இடைவேளைக்கு பிறகு வெங்கட் பிரபு அவர்களோடு இணையும் இரண்டாவது படைப்பு இதுவாகும். இத்தொடரை சிறப்பாக மாற்றிய, என்னுடன் பணிபுரிந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.

தற்போது அஷ்வின் காகுமானு இயக்குநர் மணிரத்னம் அவர்களின் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் மற்றும் பீட்சா 3 படத்தில் நடித்து வருகிறார். மேலும் அமலாபால் முதன்மை பாத்திரத்தில் நடிக்க Netflix தயாரிக்கும் தெலுங்கு ஆந்தாலஜி பிட்ட கதலு திரைப்படத்தில் கேமியோ பாத்திரத்தில் நடிக்கிறார். அவர் நடிக்கவுள்ள மேலும் சில முக்கியமான படங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.