யூடியூப் ட்ரெண்டிங்கில் சாதனை படைத்த சூர்யாவின் ‘காட்டுப்பயலே’ பாடல்!

0
280

யூடியூப் ட்ரெண்டிங்கில் சாதனை படைத்த சூர்யாவின் ‘காட்டுப்பயலே’ பாடல்!

நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகவிருக்கும் சூரரைப் போற்று படத்தில் இடம்பிடித்துள்ள காட்டுப்பயலே பாடல் இந்தியாவின் டாப் 100 பாடல்களில் ஒன்றாக இடம்பிடித்து யூடியூப் ட்ரெண்டிங்கில் உள்ளது. ஹிட் அடித்ததோடு கதாநாயகிக்கு சிறப்பு தேசிய விருதையும் பெற்றுத்தந்த இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கராதான் இப்படத்தின் இயக்குநர்.

காட்டுப்பயலே பாடல் சூர்யாவின் பிறந்தநாள் அன்று வெளியிடப்பட்டது. அப்போதே, காட்டுத்தனமாக யூடியூபில் வைரல் ஆனது. தற்போது, இந்தியாவில் வைரல் ஆகும் டாப்-100 இந்திய பாடல்களில் 28 வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து, நடிகர் சூர்யாவும் நடிகரும் இசையமைப்பாளருமான ஜீ.வி பிரகாஷும் மகிழ்ச்சியுடன் தங்களது ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறாரக்ள்.