மூன்று முறை தேசிய விருது பெற்ற நடிகை சுரேகா சிக்ரி காலமானார்

0
141

மூன்று முறை தேசிய விருது பெற்ற நடிகை சுரேகா சிக்ரி காலமானார்

மூன்று முறை தேசிய விருது பெற்ற பிரபல இந்தி நடிகை சுரேகா சிக்ரி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75.

பாலிவுட் நடிகையான சுரேகா சிக்ரி 1978-ஆம் ஆண்டு அரசியல் திரைப்படமான ’கிசா குர்சி கா’ என்ற படத்தில் அறிமுகமானார். தொடர்ச்சியாக பல்வேறு பாலிவுட் படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் துணை நடிகையாக நடித்து வந்தார்.கடந்த 1988-ஆம் ஆண்டு வெளியான ‘ தமஸ்’, 1995-ஆம் ஆண்டு வெளியான ‘மம்மோ’, கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ’பதாய் ஹோ’படத்திற்காக மூன்று முறை சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதுகளை வென்றுள்ளார். மேலும், ஒரு ஃபிலிம் ஃபேர் விருதையும் வென்றுள்ளார்.

இவர் நடித்த ’பதாய் ஹோ’ சூப்பர் ஹிட் அடித்ததால் தற்போது, போனி கபூர் தயாரிப்பில் ’வீட்ல விசேஷங்க’ என்ற தலைப்பில் ஆர்.ஜே பாலாஜி தமிழில் ரீமேக் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏராளமான இந்தி மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ள சுரேகா சிக்ரி தொலைக்காட்சித் தொடரில் நடித்தபோது தலையில் அடிப்பட்டு மூளைப் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையின் தொடர் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டவர் இன்று மாரடைப்பு ஏற்பட்டு காலையில்காலமானார். அவருக்கு வயது 75 ஆகிறது.

சுரேகா மரணத்துக்கு மனோஜ் பாஜ்பாய், பூஜா பட், அரவிந்த் கேஜ்ரிவால் போன்ற பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.