மூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின்
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதை அடுத்து தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்க உள்ளார்.
நாளை (மே 7 ஆம் தேதி) காலை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தனித்த பெரும்பான்மையோடு மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் பேராளர்களின் சட்டமன்ற உறுப்பினர்கள் பலத்தோடும், 234 இடங்கள் உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவையில் 159 உறுப்பினர்களும் ஒரு புதிய மக்கள் ஆட்சியை – புதிய விடியலைத் தருவதற்காக – உழைப்பின் உருவமான – பண்பின் பெட்டகமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது சகாக்களுடன் புதிய அமைச்சரவை அமைத்து தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியேற்கவிருக்கிறார்!
இந்நிலையில் இன்று முன்னாள் அமைச்சரும், எம்.ஜி.ஆர். கழகத் தலைவருமான ஆர்.எம்.வீரப்பன் அவர்களை அவருடைய இல்லத்துக்கு மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்து ஆசி பெற்றார்.