‘முனியாண்டியின் முனிப்பாய்ச்சல்’ படம் காந்தாரா படம் போல பேசப்படும் என்கிறார்கள் படக்குழுவினர்

0
116

“முனியாண்டியின் முனிப்பாய்ச்சல்” படம் காந்தாரா படம் போல பேசப்படும் என்கிறார்கள் படக்குழுவினர்.

“முனியாண்டியின் முனிப்பாய்ச்சல் ” திரைப்படத்தில் அறிமுக நாயகன் ஜெயகாந்த் நடித்திருக்கிறார்.

தமிழக கிராமத்து தெய்வங்களில் முக்கியமான தெய்வமான முனியாண்டி சாமியின் பக்தனாக, முனியாண்டி கோயிலில் குறி சொல்லுபவராக கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.

ஒரு காட்சியில் முனி அருள் வாக்கு சொல்லுவது போல படமாக்கும் வேளையில் நிஜமாக அருள் வந்து வாக்கு சொல்ல ஆரம்பித்ததை கண்டு ஊர் மக்களும் படக்குழுவினர் ஆச்சர்யத்தில் வியந்துள்ளனர்.

முனி வேஷம் கட்டுவதற்கு தினமும் நான்கு மணி நேரம் மேக்கப் போட்டு நடித்திருக்கிறார். பாடல் காட்சியிலும் சண்டை காட்சியிலும் முதல் படம் என்று தெரியாத அளவுக்கு சிறப்பாக நடித்திருக்கிறார் அறிமுக நாயகன் ஜெயகாந்த்.

படத்தில் வில்லனாக கொம்பன் பட வில்லன் பிரபல சண்டைப்பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன் மாஸ்டர் நடித்திருக்கிறார். சிங்கம்புலி, முத்துக்காளை , மீராராஜ் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் படப்பிடிப்பு நிறைவுபெற்று விரைவில் திரையில் வெளியாகவிருக்கிறது “முனியாண்டியின் முனிப்பாய்ச்சல்”.

கவிஞர் சினேகன் பாடல்கள் எழுதியிருக்கிறார்.

இசை- சவுந்தர்யன்.
ஒளிப்பதிவு- ராம்குமார்,
எடிட்டிங்- SP அஹமத்.
சண்டைப்பயிற்சி -பயர் கார்த்திக்.
கலை- பத்மநாபன்,

இயக்கம்- ராஜா முகம்மது.

தயாரிப்பு – ஸ்ரீஆண்டாள் மூவீஸ் P.வீர அமிர்தராஜ்.