மீராமிதுன் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவதூறு வழக்கு தொடர்வேன் – சனம் ஷெட்டி

0
254

மீராமிதுன் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவதூறு வழக்கு தொடர்வேன் – சனம் ஷெட்டி

சர்ச்சைக்கு பெயர் போனவர் மாடல் அழகி மீரா மீதுன். கடந்த சில தினங்களாக தமிழ் சினிமாத்துறை பற்றியும் தமிழ் திரையுலகின் முக்கிய நட்சத்திரங்களாக வலம் வரும் நடிகர் விஜய், அவரின் மனைவி சங்கீதா, நடிகர் சூர்யா மற்றும் சூர்யாவின் மனைவி ஜோதிகா ஆகியோர் மீது கடுமையான அருவறுக்கதக்க விமர்சனங்களை மீராமிதுன் சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தார். அவரின் இந்த செயலானது நடிகர் விஜய் சூர்யாவின் ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதனால் நடிகர் விஜய் மற்றும் சூர்யாவின் ரசிகர்கள் தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி புகார் கொடுத்திருந்தனர். இயக்குநர் பாரதிராஜாவும் மீராமிதுனை கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்தநிலையில் மீரா மிதுனை கண்டித்து நடிகை சனம் ஷெட்டி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டிருந்தார். இதனால் சனம் ஷெட்டி குறித்து அவதூறு பரப்பும் விதமாக மீராமிதுன் சமூகவலைதளத்தில் கருத்துதெரிவித்ததாக சனம் ஷெட்டி தரப்பில் கூறப்படுகிறது.

இதனால் நடிகை சனம் ஷெட்டி, மீரா மிதுனுக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதுகுறித்து நடிகை சனம் ஷெட்டியிடம் கேட்ட போது, மீராமிதுனுக்கு தான் நல்ல முறையிலேயே அறிவுரை கூறியதாகவும், ஆனால் அவரோ நற்பெயரை கெடுக்கும் விதமாக தன்னைப் பற்றி அவதூறு கூறி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். தன்னைப் பற்றி அவதூறு பரப்பியதற்காக நடிகை மீராமிதுன் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் அவதூறு வழக்கு தொடுக்க உள்ளதாகவும் நடிகை சனம் ஷெட்டி கூறியுள்ளார்.

ALSO READ:

“நேரத்தை ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு பயன்படுத்துங்கள்” – சூர்யா வேண்டுகோள்

கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர் சந்திப்பின் போது அரசு மற்றும் காவல்துறை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை மீராமிதுன் தெரிவித்தார். ஹோட்டல் மேலாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் எழும்பூர் காவல்துறையினர் மீராமிதுன் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர் என்பதும் குறிப்பிடதக்கது.

மேலும் மீராமிதுனுக்கு சினிமா வாய்ப்புகள் இல்லததாலும், சுய விளம்பரத்துக்காகவும் தமிழ் திரையுலகத்தினர் மீது மீரா மிதுன் அவதூறு பரப்பி வருவதாக பலரும் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.