மீண்டும் போனிகபூருடன் இணையும் அஜித்? – கசியும் #Thala61 அப்டேட்

0
164

மீண்டும் போனிகபூருடன் இணையும் அஜித்? – கசியும் #Thala61 அப்டேட்

நடிகர் அஜித் தனது 60 வது படமாக போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில், அடுத்த மாதம் டீசர் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், அஜித்தின் 61 வது படத்தையும் எச்.வினோத்தே இயக்குவதாகவும், போனி கபூரே தயாரிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கான அறிவிப்பு விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகும் என்றும் வரும் அக்டோபர் மாதத்தில் படப்பிடிப்பு துவங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே, ’சிறுத்தை’ சிவா இயக்கத்தில் ‘வீரம்’,’விவேகம்’, ‘விஸ்வாசம்’ என தொடர்ச்சியாக மூன்று படங்களில் அஜித் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித், போனி கபூர், ஹெச்.வினோத் கூட்டணியில் 2019 ஆம் ஆண்டு வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.