மீண்டும் திரை விமர்சனம்: பாசமும், தேசப்போராட்டமும் கலந்த கதை

0
258

மீண்டும் திரை விமர்சனம்: பாசமும், தேசப்போராட்டமும் கலந்த கதை

ஹீரோ சினிமாஸ் சி.மணிகண்டன் வழங்கும் மீண்டும் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் சரவண சுப்பையா.
இதில் கதிரவன், சரவண சுப்பையா, பிரணவ் ராயன், துரை சுதாகர், டைரக்டர் யார் கண்ணன், டைரக்டர் எஸ்எஸ்.ஸ்;;டான்லி, டைரக்டர் கேபிள் சங்கர், ஆதர்ஷ், அனாகா, சுபா பாண்டியன், அனுராதா, அபிதா ஷெட்டி, தர்ஷினி, இந்துமதி மணிகண்டன், மோனிஷா ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை-நரேன் பாலகுமார், ஒளிப்பதிவு-ஸ்ரீனிவாஸ் தேவாம்சம், எடிட்டிங்-ராஜாமுகம்மது, கலை-மணிமொழியன் ராமதுரை, பாடல்கள்-கவிப்பேரரசு வைரமுத்து. சரவணன் சுப்பையா, நடனம்-ராதிகா, சண்டை-சூப்பர் சுப்பராயன், வெளியீடு-பி.டி.செல்வகுமார், பிஆர்ஒ-டைமண்ட்பாபு.

பாதுகாப்பு மிகுந்த உளவுத்துறையில் மறைமுகமாக முக்கிய பணியில் இருக்கும் கதிரவன் தன் காதல் மனைவி அனாகா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போது வேலை நிமித்தமாக தனியாக விட்டுச் சென்று விடுகிறார். அனாகா பிரசவ வலியால் துடித்து பிரிந்து வந்த பெற்றோரை தொடர்ப்பு கொண்டு அவர்களுடன் சென்று விட, ஆண் குழந்தை பிறந்தாலும் அவரது பெற்றோர் மறைத்து இறந்து விட்டதாக அனாகவிடம் கூறிவிடுகின்றனர். குழந்தையை அனாதை ஆசரமத்தில் அனாகா பெற்றோர் விட்டு விட, வேலை முடிந்து திரும்பி வரும் கதிரவனுக்கு மனைவி இல்லாதது அதிர்ச்சியானாலும், எங்கு இருக்கிறார் என்பது தெரியாமல் எப்படியோ குழந்தையை மட்டும் ஆசி;ரமத்திலிருந்து மீட்டு பாசத்துடன் வளர்த்து வருகிறார். கேரளாவில் அனாகாவின் பெற்றோரும் எதிர்பாராதவிதமாக இறந்து விட, அனாதையாக மனஉளைச்சலில் இருக்கும் அனாகாவை சரவண சுப்பையா பார்த்து தன் குடும்பத்தில்  ஒருவராக அரவணைத்து திருமணமும் செய்து கொள்கிறார். சென்னைக்கு வரும் அனாகா எதிர்பாராதவிதமாக கதிரவனை குழந்தையுடன் பார்த்து, தன்னுடைய குழந்தை தான் என்பதை உறுதி செய்கிறார். சரவண சுப்பையாவும் மனைவியின் ஆசைப்படி கதிரவனிடம் பேசி இரண்டு நாளைக்கு குழந்தையை வீட்டிற்கு அழைத்து வருகிறார். பாசத்துடன் அணுகும் அனாகாவை வெறுக்கும் குழந்தை கதிரவனிடமே செல்ல அடம்பிடிக்கிறது. இந்த சமயத்தில் கதிரவனுக்கு மீண்டும் முக்கிய பணிக்காக அழைப்பு வர, இதில் உள்துறை, ராணுவ ரகசியம், நாட்டின் அச்சுறுத்தல் ஆகியவை உள்ளடக்கியதால் சிலாக்கி தீவிற்கு செல்ல ஆயத்தமாகிறார். அங்கே சென்றவர்கள் திரும்பி வருவது கடினம் என்பதால், மகனை அனாகாவின் பாதுகாப்பில் விட்டுச் செல்கிறார். கதிரவன் கொடுத்த வேலையை வெற்றிகரமாக முடித்து திரும்பினாரா? மகனை பார்க்க திரும்பி வந்தாரா? என்பதே மீதிக்கதை.

கதிரவன் கதாநாயகனாக, பாசமிகு தந்தையாக, அன்பான கணவனாக, தைரியமிக்க வீரனாக கொடுத்த பாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். அனாகாவிற்கு பாசத்திற்கு ஏங்கும் தாயாக இரண்டு கணவர்களுக்கு நடுவே தவித்து யதார்த்தமாக நடித்துள்ளார். இரண்டாவது கணவராக சரவணன் சுப்பையா மனைவியின் சந்தோஷத்திற்காக எதையும் கொடுக்கும் குணம், சிக்கலான கதாபாத்திரத்தை அமைதியாக, இயல்பாக, கணிவு மிக்க கணவராக நச்சென்று மனதில் பதிகிறார்.

பிரணவ் ராயன், துரை சுதாகர், டைரக்டர் யார் கண்ணன், டைரக்டர் எஸ்எஸ்.ஸ்டான்லி, டைரக்டர் கேபிள் சங்கர், ஆதர்ஷ், அனாகா, சுபா பாண்டியன், அனுராதா, அபிதா ஷெட்டி, தர்ஷினி, இந்துமதி மணிகண்டன், மோனிஷா ஆகியோர் பக்கமேளங்களாக வந்து போகிறார்கள்.

இசை-நரேன் பாலகுமார், ஒளிப்பதிவு-ஸ்ரீனிவாஸ் தேவாம்சம், கலை-மணிமொழியன் ராமதுரை ஆகியோரின் பங்களிப்பு படத்திற்கு சிறப்பம்சம்.

எடிட்டிங்-ராஜாமுகம்மது இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம்.

இந்திய நாட்டிற்காக மற்றொரு நாட்டில் உளவாளியாக செல்லும் கதாநாயகனின் பணி சம்பந்தமான காட்சிகள் நாடகத்தன்மையோடு கொடுத்திருக்கிறார் இயக்குனர் சரவணன் சுப்பையா.  எதிலும் ஒரு நம்பகத்தன்னையில்லாமல் சொல்லியிருக்கும் விதமும் எடுத்திருக்கும் விதமும் அழுத்தமில்லாத திரைக்கதையால் தடுமாறுகிறது.

இறுதிக்காட்சியில் கதாநாயகன் நிர்வான சித்ரவதை அனுபவித்து தப்பிக்கும் காட்சிகள்  அதிர்ச்சியோடு கொடுத்து கதாநாயகன் தப்பித்தார் என்று நினைக்க க்ளைமேகஸில் எவ்வாறு முடிப்பது என்று திணறி தாய் செண்டிமென்ட் கலந்து சிறப்பாக கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் சரவணன் சுப்பையா.

மொத்தத்தில் ஹீரோ சினிமாஸ் சி.மணிகண்டன் வழங்கும் மீண்டும் பாசமும், தேசப்போராட்டமும் கலந்த கதை.