மீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி!

0
185

மீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி!

வடிவேலு நடிக்கும் புதிய திரைப்படத்தை சுராஜ் இயக்குகிறார். இதற்கான முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த வடிவேலு ஒரு சில காரணங்களால் திரைப்படங்களில் நடிக்காமல் உள்ளார். இவர் தற்போது பிரச்சனைகள் அனைத்தையும் முடித்து திரைப்படங்களில் நடிக்க தயாராகி உள்ளார்.

அதில் முதல்கட்டமாக சுராஜ் இயக்கும் நகைச்சுவை திரைப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று முடிவடைந்து முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வடிவேலு இணையும் திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க அதிக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மேலும் செப்டம்பர் மாதத்தில் படத்தை தொடங்கும் சுராஜ் திட்டமிட்டு வருகிறார்.

வடிவேலு – சுராஜ் கூட்டணியில் வெளியான தலைநகரம், மருதமலை ஆகிய படங்களில் இடம்பெற்ற நகைச்சுவை காட்சிகள் பெரும் வெற்றியடைந்தன. இந்த நிலையில் தற்போது முழுக்க முழுக்க நகைச்சுவை பின்னணி கொண்ட திரைப்படத்திற்காக இருவரும் இணைகின்றனர்.