‘மாஸ்டர்’ சண்டைக்காட்சிகள் ரசிகர்களை சீட்டின் நுனியில் அமரவைக்கும் – ஸ்டண்ட் சில்வா!

0
419

‘மாஸ்டர்’ சண்டைக்காட்சிகள் ரசிகர்களை சீட்டின் நுனியில் அமரவைக்கும் – ஸ்டண்ட் சில்வா!

இந்த ஆண்டில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர். கைதி படத்தின் மூலம் வெற்றிப்பட இயக்குநர்களின் வரிசையில் வந்துள்ள லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள அதில் சண்டைக் காட்சிகள் ஸ்பெஷலாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

படத்தின் போஸ்டர்களே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், விஜய் சேதுபதி வில்லன் என்ற செய்தியும் மாஸ்டருக்குப் பலம் சேர்த்தது. அடுத்தடுத்து ஏதாவதொரு செய்தி வெளியான வண்ணம் உள்ளது. அண்மையில் நடிகை மாளவிகா மோகனன், படத்தில் தனது கதாபாத்திரம் பற்றி டிவிட்டரி பதிவிட்டிருந்தார்.

 

இப்போது ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டண்ட் சில்வா, ரசிகர்களை சீட்டின் நுனியில் அமரவைக்கும் ஆறு சண்டைக்காட்சிகள் மாஸ்டரில் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளார். வெறும் சண்டைக் காட்சிகளாக இல்லாமல், திரைக்கதையின் தேவைக்கேற்ப வைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

எதிர்பார்ப்புகளை ஏகத்துக்கும் ஏற்படுத்தியுள்ள மாஸ்டர் படத்திற்கு இசை சேர்ப்பவர் அனிருத். இந்தப் படத்தில் முதன்முறையாக விஜய் ஒரு பேராசிரியராக வருகிறார். மாணவர்களுக்கு என்ன கற்றுக்கொடுக்கப்போகிறார் என்று திரையில் பார்க்கலாம்.