மாமனிதன்’ படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட சீனு ராமசாமி
’மாமனிதன்’ என்ற தலைப்பை யுவன்ஷங்கர் ராஜா முறைப்படி பெற்றுவிட்டதாகவும், இப்படத்தின் முதல் பார்வை முதல் பார்வை விரைவில் வெளியாகும் என்று சீனு ராமசாமி அறிவித்திருக்கிறார்.
மாமனிதன்’ படத்தின் மூலம் விஜய் சேதுபதி – சீனுராமசாமி கூட்டணி நான்காவது முறையாக இணைந்துள்ளது. யுவன்ஷங்கர் ராஜா இப்படத்தினை தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் படங்களில் மட்டும் இளையராஜா அவ்வவ்போது பாடல்களை பாடி வந்தார். ‘நீதானே என் பொன்வசந்தம்’, ‘மேகா’ உள்ளிட்ட இளையராஜா இசையமைத்த படங்களில் யுவன் பாடினார்.
தற்போது, இளையராஜவும், யுவன் சங்கர் ராஜாவும் முதன்முறையாக இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்கள் என்பது கூடுதல் சிறப்பு. விஜய் சேதுபதியுடன் காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நீண்ட நாட்களாக படத்தை வெளியிடாமல் இருக்கிறது படக்குழு. இந்நிலையில், சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் அப்டேட்டை கொடுத்திருக்கிறார்.
” ’மாமனிதன்’தலைப்பு ஏற்கனவே தயாரிப்பாளர் திரு,ஜெயசீலன் என்பவரிடம் இருந்தது அதை முறைப்படி யுவன் சங்கர் ராஜா இரண்டு நாட்களுக்கு முன்பு பெற்றார். ஆகவே மாமனிதன் படத்தின் தலைப்பு எங்கள் படத்திற்கு உறுதியானது. தலைப்பு பெற்றதால் முதல் பார்வை, பாடல் விரைவில்” என்று தெரிவித்திருக்கிறார்.