மாநாடு படத்தை வெளியிடவிடாமல் கட்ட பஞ்சாயத்து செய்கிறார்கள் – டி.ராஜேந்தர்

0
190

மாநாடு படத்தை வெளியிடவிடாமல் கட்ட பஞ்சாயத்து செய்கிறார்கள் – டி.ராஜேந்தர்

சென்னை, வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. இந்த படம் வருகிற நவம்பர் 4ந் தேதி தீபாவளி அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் படத்தின் வெளியீடு நவம்பர் 25ந் தேதிக்கு தள்ளிப்போவதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார்.

இந்நிலையில், டி.ராஜேந்தர் செய்தியாளர்க சந்திப்பில் கூறியதாவது:-

மாநாடு படத்தை வெளியிடவிடாமல் கட்டபஞ்சாயத்து செய்கிறார்கள். தனது மகன் சிம்புக்கு தொடர்ந்து கொலைமிரட்டல் வருகிறது. நடிகர் சிம்புக்கு நெருக்கடி கொடுக்கவே மாநாடு திரைப்படம் முடக்கப்பட்டுளது.

மாநாடு படத்தை வெளியிடவிட்டால் நடவடிக்கை கோரி முதல்-அமைச்சர் வீட்டு முன் உண்ணாவிரதம இருப்போம் என்றார்.