மறைந்த பழம்பெரும் நடிகை ராஜசுலோச்சனாவின் 88வது பிறந்தநாளை முன்னிட்டு NGL அறக்கட்டளை சார்பாக அமுதும் தேனும் நிகழ்ச்சி நடிகை லதா, தேவி கிருஷ்ணா தலைமையில் நடைபெற்றது
பழம்பெரும் நடிகைகள் கலந்து கொண்ட,NGL அறக்கட்டளை சார்பாக அமுதும் தேனும் என்கிற நிகழ்ச்சி பழம்பெரும் நடிகை ராஜசுலோச்சனா அவர்களின் 88வது பிறந்தநாளை முன்னிட்டு திநகரில் உள்ள ஆந்திரா கிளப்பில் நடைபெற்றது
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக 1960,1970 கால திரைத் துறையைச் சார்ந்த மூத்த நடிகைகள் ஸ்ரீமதி லதா, லட்சுமி பாய்,ALS ஜெயந்தி, சுஜ்ஜரித்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் மேலும் நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்
NGL அறக்கட்டளையின் சார்பாக மறைந்த மூத்த நடிகையும் நடன கலைஞருமான ராஜசுலோசனாவின் 88வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவை நினைவுகூறும் வகையில் அமுதும் தேனும் என்கிற நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்படத்தக்கது.
இந்த நிகழ்ச்சியின்போது NGL அறக்கட்டளை சார்பாக நாட்டின் 75ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள அபிஷேக்,ஜெயஸ்ரீ ஆகிய இரண்டு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் பழம்பெரும் பன்முக நடிகைகளின் திரைப்படம் மற்றும் பாடல்கள் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது