மனைவியை திடீரென விவாகரத்து செய்த இயக்குனர் பாலா…

0
158

மனைவியை திடீரென விவாகரத்து செய்த இயக்குனர் பாலா…

பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் பாலா பின்னர் கடந்த 1999-ம் ஆண்டு வெளியான விக்ரமின் சேது படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். அப்படம் அவருக்கு மட்டும் பெயரை வாங்கி கொடுக்காமல் ஒரு நடிகராக விக்ரமிற்கு பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தது.

தன் முதல் படத்திலேயே தனக்கான தனி பாணியை உருவாக்கினார் பாலா. அதன் பின் பிதாமகன், நான் கடவுள், பரதேசி, அவன் இவன் போன்ற வித்யசமான கதைக்களத்தில் படங்களை உருவாக்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.சூர்யா, ஆர்யா, விக்ரம் போன்ற நடிகர்கள் இவரின் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக உருவெடுத்தனர். இவரது படங்கள் இதுவரை 13 மாநில விருதுகளையும், 6 தேசிய விருதுகளையும் பெற்றுள்ளது. இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் வெற்றிகண்டார் பாலா.

அந்த வகையில் சூர்யாவின் மாயாவி, மிஷ்கினின் பிசாசு அதர்வா நடித்த சண்டி வீரன் போன்ற படங்களை தயாரித்துள்ள பாலா, தற்போது ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ள விசித்திரன் படத்தை தயாரித்துள்ளார். மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ஜேசப் என்கிற படத்தின் ரீமேக்காக உருவாகி உள்ள இப்படம் வருகிற மே மாதம் திரைக்கு வர உள்ளது.

இந்த நிலையில் இயக்குனர் பாலா கடந்த 2004-ம் ஆண்டு முத்துமலர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், தற்போது சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் இருவரும் முறையாக விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர். இதன்மூலம் இவர்களது 18 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.

பாலா எப்போதும் யாருக்கும் அஞ்சாமல் வெளிப்படையாக பேசக்கூடியவர். அதன்காரணமாக பல சர்ச்சைகளை சந்தித்துள்ளார். எனவே அந்த வெளிப்படையான பேச்சுதான் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்க கூடும் என ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது நடிகர் சூர்யாவை வைத்து படம் இயக்கும் வேலைகளில் பாலா ஈடுபட்டு வருகிறார்.

சமீப காலமாக சினிமா நட்சத்திரங்களின் விவாகரத்து என்பது தொடர்கதை ஆகி வருகிறது. கடந்தாண்டு நடிகை சமந்தாவும் நடிகர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதையடுத்து இயக்குனர் டி.இமான் விவாகரத்து முடிவை அறிவித்தார். இந்த ஆண்டு தொடக்கத்தில் தனுஷும் ஐஸ்வர்யாவும் திருமண முறிவை அறிவித்தனர். தற்போது பாலாவும் விவகாரத்து செய்துள்ளது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.