மனிதாபிமானமற்ற மந்தானா…! ராஷ்மிகாவை விமர்சிக்கும் ரசிகர்கள்

0
110

மனிதாபிமானமற்ற மந்தானா…! ராஷ்மிகாவை விமர்சிக்கும் ரசிகர்கள்

மும்பை

தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்து பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா.

தெலுங்கு கன்னட மொழிகளிலும் அதிக படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான புஷ்பா படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் கவனம் பெற்றார்.

அதேநேரம் ராஷ்மிகாவுக்கு அழகு இருக்கிறது .ஆனால் நல்ல மனது இல்லை என்று ரசிகர்கள் விமர்சனம் செய்யும் அளவுக்கு சர்ச்சையிலும் சிக்கியுள்ளார். இதற்கு காரணம் நேற்று ரஷ்மிகா மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்து வெளியே வந்தார்.

அப்போது இரண்டு ஆதரவற்ற சிறுமிகள் அவரைச் சூழ்ந்து கொண்டனர். அதில் ஒரு சிறுமி அவரை நோக்கி ஓடி வந்து ஏதாவது கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார். இப்போது என்னிடம் எதுவும் இல்லை என்று அன்பாக பதிலளித்தார். அந்த சிறுமியை ராஷ்மிகாவின் பாதுகாவலர்கள் தள்ளிவிட்டனர். ஆனாலும் அந்த குழந்தை ராஷ்மிகாவை நோக்கி கையை நீட்டி பசிக்கிறது சாப்பிட வேண்டும். ஏதாவது இருந்தால் கொடுங்கள்.

பின்னர் அவள் காரில் அமர்ந்தபோது மேலும் ஒரு குழந்தை சேர்ந்து உணவு கேட்டது. ஆனால் நடிகை அதைக் கேட்காமல் சிரித்துக்கொண்டே சென்று காரில் உட்கார்ந்து விட்டார். இந்த வீடியோ வலைத்தளத்தில் வைரலாகி பலரும் ராஷ்மிகாவின் மனிதாபிமானமற்ற செயலை விமர்சித்து வருகின்றனர்.

https://www.instagram.com/reel/CZHrJL3Il3z/?utm_source=ig_embed&ig_rid=6196d040-259d-4a0d-9865-23d3fd3184d4