மத்திய, மாநில அரசுகள், ரசிகர்களுக்கு நன்றி: விவேக் மனைவி பேட்டி

0
188

மத்திய, மாநில அரசுகள், ரசிகர்களுக்கு நன்றி: விவேக் மனைவி பேட்டி

மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி, மத்திய, மாநில அரசுகளுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

நகைச்சுவை நடிகரும், தமிழில் ஏராளமான படங்களில் நடித்தவரும், ‘சின்னக் கலைவாணர்’ என்று புகழப்பட்டவருமான நடிகர் விவேக் (59) நேற்று முன்தினம் மாரடைப்பு ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று (ஏப்ரல் 17) காலை உயிரிழந்தார்.

அவருடைய மறைவுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தார்கள். மேலும், பல்வேறு திரையுலக பிரபலங்கள் நேரிலும் விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

தற்போது வரை விவேக்கிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், விவேக்கின் மனைவி அருள்செல்வி, அவருடைய மகள்கள் அமிர்த நந்தினி, தேஜஸ்வினி மைத்துனர் செல்வகுமார் ஆகியோர், சென்னையில் இன்று (ஏப். 18) செய்தியாளர்களை சந்தித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விவேக்கின் மனைவி அருள்செல்வி,

எங்களுக்கு பக்க பலமாக இருந்த மத்திய மாநில அரசிற்கு நன்றி, அரசு மரியாதை அளித்ததற்கு அரசிற்கு நன்றி, இறுதி வரை உடன் இருந்த காவல்துறைக்கும், ஊடக்கத்துறைக்கும் நன்றி.

இறுதி அஞ்சலியில் பங்கு பெற்ற கோடான கோடி ரசிகர்கர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். என்றார்.