மதுரை மணிக்குறவர் திரை விமர்சனம்: பழைய லாஜிக் கலந்த படம் மதுரைமணிக்குறவர்

0
215

மதுரை மணிக்குறவர் திரை விமர்சனம்: பழைய லாஜிக் கலந்த படம் மதுரைமணிக்குறவர்

காளையப்பா பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பு.காளையப்பன் தயாரித்திருக்கும் படம் மதுரை மணிக்குறவர்.

ஹரிகுமார் இரட்டை வேடங்களில் நடிக்க மாதவிலதா கதாநாயகியாகி நடித்திருக்கிறார்.தயாரிப்பாளர் ஜி.காளையப்பன், hதாரவி, சுமன், சரவணன், எம்.எஸ்.பாஸ்கர், கஞ்சா கருப்பு, ராஜ்கபூர், டெல்லி கணேஷ், பெசன்ட்நகர் ரவி, ஓ.ஏ.கே.சுந்தர், கவுசல்யா, சுஜாதா, அஸ்மிதா ஆகியோர் நடித்து  கதை. திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் ராஜரிஷி.

தொழில்நுட்ப கலைஞர்;கள்:- இசை- இசைஞானி இளையராஜா, பாடல்கள்-முத்துலிங்கம், ஒளிப்பதிவு-டி.சங்கர், படத்தொகுப்பு-வி.டி.விஜயன்-கணேஷ்பாபு, சண்டை-ஜாக்குவார் தங்கம், விஜய் ஜாக்குவார் தங்கம்,நடனம்-தினா, அபிநயஸ்ரீ,வசனம்- வெற்றி விஜய்,மக்கள் தொடர்பு – வெங்கட்.

ராதாரவி(பால்பாண்டி) ஒ.ஏ.கே.சுந்தர்(சின்னச்சாமி) சகோதரர்கள். ராதாரவிக்கு கோயில் திருவிழாவில் பரிவட்டம் கட்டும் போது ஒஏகே.சுந்தர் தகராறு செய்ய, அங்கே நடக்கும் சண்டையில் இருவரும் இறந்து விடுகின்றனர். ராதாரவியின் மனைவி கவுசல்யா நிறைமாத கர்ப்பிணி, அதிர்ச்சியில் கிழே விழுந்து விட மருத்துவமனையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறக்க கவுசல்யா இறந்து விடுகிறார். அனாதைகளாகி விட்ட குழந்தைகளில் ஒரு குழந்தை மணியை ஒஏகே.சுந்தர் மனைவி வளர்க்கிறார். மற்றொரு குழந்தை ராஜாவை அதே மருத்துவமனையில் இன்ஸ்பெக்டர் தம்பதிக்கு கொடுத்து விடுகின்றனர். பல வருடங்களுக்குப் பிறகு ஹரிகுமார்(தண்டல் மணி) மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் குறைந்த வட்டியில் கடன் கொடுத்தும், பன்றிகளை வளர்த்து விற்றும் தொழில் செய்கிறார். அங்கே அதிக அநியாய வட்டிக்கு கடன் கொடுக்கும் காளையப்பா, சுமன் (எம்எல்ஏ தண்டபாணி), சாராய வியாபாரி சரவணன்(வேலு) ஆகியோருக்குமிடையே  சென்டரல் மார்கெட்டில் தகராறில் ஆரம்பித்து, குளத்தை மீனுக்காக ஏலம் எடுக்கும் வரையிலும் ஹரிக்குமாருடன் மோதல் ஏற்பட்டு பகையாக மாறுகிறது. ஹரிகுமாhருக்கு (தண்டல் மணி) மாமன் மகளுடன் திருமணம் நடக்கவிருக்கும் சமயத்தில் மாமன் மகளை கடத்தி வேறொருவருக்கு திருமணம் செய்து விடுகிறார் எம்எல்ஏ சுமன். ஹரிக்குமார்(தண்டல் மணி) திருமணம் நின்று விட, அதே சமயம் இன்னொரு பெண் மாதவிலதாவிற்கும் வில்லன்களால் திருமணம் தடைபடுகிறது. அதனால் சந்தர்ப்ப வசத்தால் ஹரிக்குமார்(தண்டல் மணி) மாதவிலதாவை திருமணம் செய்து கொள்கிறார். திருமண நாளன்று ஹரிக்குமாரை (தண்டல் மணி) காளையப்பா, சுமன், சரவணன் சேர்ந்து கொலை செய்துவிடுகின்றனர். இந்த கொலையை விசாரிக்க புது இன்ஸ்பெக்டராக இன்னொரு ஹரிக்குமார்(ராஜா) மாற்றலாகி மதுரைக்கு வருகிறார். ஹரிக்குமாரின் உருவ ஒற்றுமையால்  வில்லன்கள் தடுமாறுகின்றனர். இறுதியில் தன் சகோதரன் தண்டல் மணியை கொன்றவர்களை கண்டுபிடித்தாரா? கொலையாளிகளை பழி வாங்கினாரா? விதவை மாதவிலதாவிற்கு வாழ்வு கொடுத்தாரா? என்பதே க்ளைமேக்ஸ்.

ஹரிகுமார் இரட்டை வேடங்களில் அதிரடி ஆக்ஷன் நிறைந்த விரைப்பான தண்டல் மணியாகவும். முறைப்பான கண்டிப்பு மிக்க போலீஸ் அதிகாரி ராஜாவாகவும் மிகையில்லா நடிப்பை கொடுத்துள்ளார். மாதவிலதா கதாநாயகியாக அழகான மிதமாக நடித்திருக்கிறார். இவர்களுடன் வில்லனாக தயாரிப்பாளர் ஜி.காளையப்பன், ராதாரவி, சுமன், சரவணன், எம்.எஸ்.பாஸ்கர், கஞ்சா கருப்பு, ராஜ்கபூர், டெல்லி கணேஷ், பெசன்ட்நகர் ரவி, ஓ.ஏ.கே.சுந்தர், கவுசல்யா, சுஜாதா, அஸ்மிதா ஆகியோர் படை சூழ காமெடியன்களாக ஏகப்பட்ட நட்சத்திரங்கள் வந்து போகிறார்கள் .

இளையராஜாவின் இசையில் வரும் மனசுல பெரிய வந்தான் மதுரக்காரன் என்று தோன்றிப் பாடும் மதுரையின் புகழ் பாடும் பாடலோடு துவங்கும் பாடல் கேட்கும் ரகம் மற்ற பாடல்கள் சில முணுமுணுக்க வைக்கின்றன.

ஜாக்குவார் தங்கம், விஜய் ஜாக்குவார் தங்கம் அதிரடி சண்டைக் காட்சிகள் வழக்கமான காட்சிகளுடன் துணை போகிறது.

ஒளிப்பதிவு-டி.சங்கர், படத்தொகுப்பு-வி.டி.விஜயன்-கணேஷ்பாபுஆகிய இருவரும் திரைக்கதைக்கேற்ற பங்களிப்பை கொடுத்து கவனம் ஈர்க்கின்றனர்.

மதுரையில் தொடங்கும் கதைக்களம் அதில் தகராறு,சண்டை, பகை, கொலை என்று முதல் பாதியில் காட்சிப்படுத்தி இரண்டாம் பாதியில் ஃபிளாஷ்பேக் காட்சிகளுடன் இரட்டையர்கள் என்ற உண்மையை சொல்லி சகோதரன் கொலைக்கு பழி வாங்குவதாக திரைக்கதையமைத்திருக்கிறார் இயக்குனர் ராஜரிஷி.மதுரையில் நடந்த உண்மை சம்பவத்தை கருவாக கொண்ட படம் என்று டைட்டிலில் காட்டினாலும், எந்த சம்பவம் உண்மை என்று தெரியாமல் குழம்ப வேண்டி உள்ளது. மதுரை மணிகுறவர் என்ற டைட்டிலில் மதுரைமணி பொருத்தமாக இருக்கிறது, குறவர் எதற்காக சேர்த்தார்கள் என்று தெரியவில்லை, அதற்கான காரணமும் சொல்லப்படவில்லை. இதில் மறுமணத்திற்கு குரல் கொடுத்திருப்பது தான் ஹைலைட்ஸ்.

மொத்தத்தில் காளையப்பா பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பு.காளையப்பன் தயாரித்திருக்கும் ஆக்ஷன், பழி வாங்கும் குடும்ப செண்டிமெண்ட்டோடு பழைய லாஜிக் கலந்த படம் மதுரைமணிக்குறவர்.